சென்னையில் ஒரு விழாவில் கிழிந்த சட்டையுடன் பங்கேற்ற நடிகர் விஷால்.. பின்னணியில் நெகிழ்ச்சி சம்பவம்
சென்னை: சென்னையில் ஒரு விழாவில் கிழிந்த சட்டையுடன் நடிகர் விஷால் கலந்து கொண்டிருந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.
சினிமா துறையில் இருக்கும் பலர் தங்களால் இயன்ற உதவிகளை அறக்கட்டளைகளை வைத்து செய்து வருகிறார்கள். கல்வி, வாழ்வாதாரம், வேலைவாய்ப்பு உள்ளிட்ட விஷயங்களில் உதவி வருகிறார்கள். அந்த வகையில் நடிகர் விஷாலும் சினிமாவைத் தாண்டி பல நலத்திட்டங்களை செய்து வருகிறார்.

இவர் சென்னையில் செம்மஞ்சேரியில் உள்ள தனியார் கல்லூரியில் வில்லேஜ் டிக்கெட் என்ற நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அப்போது தப்பாட்டம், சிலம்பாட்டம், மயிலாட்டம் என அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
அங்கு வைத்திருந்த வில்லேஜ் டிக்கெட் கண்காட்சியை மாட்டு வண்டியில் நடிகர் விஷால் சுற்றி பார்த்தார். இதையடுத்து அங்கு வைக்கப்பட்டிருந்த வயலில் பெண்களுடன் இறங்கி நடவு நட்டார். அப்போது எதிர்பாராதவிதமாக அவருடைய தோள்பட்டையில் சட்டை கிழிந்துவிட்டது.

இதையடுத்து அவருக்கு உடனடியாக மாற்று சட்டை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால் அந்த சட்டையை வாங்க மறுத்துவிட்டார் விஷால், பிறகு விவசாயத்தால் கிழிந்த சட்டை அப்படியே இருக்கட்டும் என கூறி நிகழ்ச்சி முழுவதும் கிழிந்த சட்டையுடனே பங்கேற்றார். இந்த சம்பவம் அப்பகுதியில் இருந்தவர்களை நெகிழ செய்துள்ளது.
விஷால் தற்போது நடித்துள்ள மார்க் ஆண்டனி என்ற படம் ஜூலை 28ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதையடுத்து மூன்றாவது முறையாக மீண்டும் ஹரி இயக்கத்தில் விஷால் நடிக்கிறார். இந்த படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்புராஜும் ஜீ ஸ்டுடியோஸ் நிறுவனர்களும் இணைந்து தயாரிக்கிறார்கள்.

ஆக்ஷன் படங்களில் நடித்து வரும் நடிகர் விஷால், அர்ஜுனிடம் உதவி இயக்குநராக இருந்தார். இவருக்கு சண்டைக்கோழி, திமிரு, தாமிரபரணி, மலைக்கோட்டை, பூஜை உள்ளிட்ட படங்கள் கைகொடுத்தன. அது போல் அவர் நடித்த எனிமி திரைப்படம் அண்ணாத்த படத்திற்கு போட்டியாக களமிறங்கியது. ஆனால் இந்த படம் அந்தளவுக்கு வரவேற்பை பெற்றுத் தரவில்லை.

லத்தி எனும் புதிய படத்தில் விஷால் நடித்து வருகிறார். இந்த படத்தின் சண்டை பயிற்சியின் போது விஷாலுக்கு காயம் ஏற்பட்டது. அதில் இறுதி சண்டை காட்சிகள் அடங்கிய வீடியோவை விஷால் தனது ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில் கிழிந்த சட்டையுடன் உடம்பில் ரத்த காயங்களுடன் காட்சியளித்தார். இதை பார்த்த ரசிகர்கள் விஷாலுக்கு என்ன ஆயிற்றோ என கவலைப்பட்டனர். பின்னர் இவையெல்லாம் சினிமா ஷூட்டிங் என புரிந்து கொண்டனர்.

-
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு!












Click it and Unblock the Notifications