Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கப்பல் செல்லும் பாம்பன் பாலத்தை வெட்டி எடுப்பதன் பின்னணி? ராமேஸ்வரத்தின் உயிர்நாடி கண்ணீர் குட்பை

Subscribe to Oneindia Tamil

ராமேஸ்வரம்: உலகப் புகழ் பெற்ற பாம்பன் பழைய ரயில் பாலத்தை அகற்றும் பணிகளுக்காக பிப்ரவரி முதல் மே மாதம் வரை ரயில் பாலத்தைக் கடந்து செல்ல படகு மற்றும் கப்பல்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது... இதுகுறித்து அறிவிப்பு வெளியிட்டுள்ள அதிகாரிகள், இதற்கான காரணத்தையும், விரிவாக விவரித்துள்ளனர்..

ராமேஸ்வரம் தீவின் உயிர்நாடியாக திகழ்ந்த பழைய பாம்பன் பாலம், தற்போது நிரந்தரமாக அகற்றப்படும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது...

Pamban Sea Bridge Rameswaram Ship

ஒரு பொறியியல் அதிசயத்திலிருந்து அபாயகரமான அமைப்பாக இது மாறியதற்குப் பின்னால் சில முக்கியப் பிரச்சனைகளும் சொல்லப்படுகின்றன.. அதில் ஒருசிலவற்றை இங்கே பார்ப்போம்..

துருப்பிடித்த இயந்திரங்கள்

முதலாவதாக, இந்த பாலத்தின் மையப்பகுதியில் கப்பல்கள் செல்வதற்காக பயன்படுத்தப்பட்ட 'ஷெர்சர் ஸ்பான்' இப்போது அதன் செயல்பாட்டை முழுமையாக இழந்துவிட்டது.. இந்த பகுதியில் வீசும் அதிக உப்புத்தன்மை கொண்ட காற்றினால், பாலத்தின் கியர் அமைப்புகள் மற்றும் இரும்புச் சக்கரங்கள் மிக மோசமாகத் துருப்பிடித்துள்ளன.

சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில், 25க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பல மணிநேரம் போராடியும், அந்தப் பாலத்தை வெறும் 15 டிகிரிக்கு மேல் உயர்த்த முடியவில்லை... வழக்கமாக 81 டிகிரி வரை திறக்கப்பட வேண்டிய இந்தப் பகுதி, இப்போது கப்பல்கள் செல்வதற்குப் போதிய வழியைத் தர முடியாத நிலையில் முடங்கி போயுள்ளது.

வலுவிழந்த இரும்புத் தூண்கள்

அடுத்ததாக, சுமார் 108 ஆண்டுகளாக கடல் நீரிலேயே நின்றிருக்கும் இந்தப் பாலத்தின் இரும்புத் தூண்கள், மீட்க முடியாத அளவிற்குச் சேதமடைந்துள்ளன... துருப்பிடித்த இரும்பு தூண்களின் தாங்கும் திறன் குறைந்துவிட்டதால், அதன் மீது ரயில்களை இயக்குவது பயணிகளின் பாதுகாப்பிற்குப் பெரும் அச்சுறுத்தலாக மாறிவிட்டது.. கடந்த 2022-ல் ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டதற்கு இதுவே மிக முக்கியக் காரணமாகும்.

முதலில் இந்தப் பாலத்தின் ஒரு பகுதியை நினைவுச் சின்னமாகப் பராமரிக்க ரயில்வே நிர்வாகம் திட்டமிட்டிருந்தது. ஆனால், பாலத்தின் அடித்தளம் மற்றும் தூண்கள் எந்த நேரத்திலும் சரிந்து விழும் நிலையில் இருப்பதால், அதனை அப்படியே விடுவது கடல் போக்குவரத்திற்கும், அந்த பகுதி மீனவர்களுக்கும் விபத்தை ஏற்படுத்தக்கூடும் என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

இதன் காரணமாகவே, கனத்த இதயத்துடன் அந்த பழைய இரும்பு பாலத்தை வெட்டி எடுக்கும் பணியை ரயில் விகாஸ் நிகாம் லிமிடெட் தற்போது தொடங்கியுள்ளது. இந்த சூழலில்தான் ஒரு முக்கிய அறிவிப்பை நேற்றைய தினம் அதிகாரிகள் விடுத்துள்ளனர்..

பழைய பாலம் அகற்றம்

அதில், "புதிய பாலம் கடந்த ஏப்ரல் 6-ம் தேதி முதல் பயன்பாட்டில் உள்ளது. இந்த ரயில் பாலங்களை கடந்துதான் சென்னை, காக்கிநாடா, விசாகப்பட்டினம், கொல்கத்தா உள்ளிட்ட வடக்குப் பகுதி துறைமுகங்களிலிருந்து தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட தென்பகுதி துறைமுகங்களுக்கும், குஜராத், மும்பை, கோவா, கேரளா போன்ற மேற்குப் பகுதி துறைமுகங்களிலிருந்து வங்காள விரிகுடா கடல் பகுதிக்கு சிறிய ரக கப்பல்கள், ஆழ்கடல் மீன்பிடிப் படகுகள் பயணித்து வருகின்றன.

கப்பல்கள், படகுகள் செல்வதற்காக புதிய ரயில் பாலத்தின் நடுவே உள்ள செங்குத்து தூக்குப் பாலம் ஒவ்வொரு முறை தூக்கப்படும்போதும், பழைய ரயில் தூக்குப்பாலமும் திறக்கப்பட வேண்டியுள்ளது. இதனால் பழைய ரயில் பாலத்தை அகற்ற ரயில்வே நிர்வாகம் முடிவு செய்தது.

கப்பல், படகுகள் செல்ல தடை

ரயில் விகாஸ் நிகம் லிமிடெட் சார்பில், பழைய பாம்பன் பாலம் நடுவில் தூக்குப்பாலம் மற்றும் கர்டர் பாலம், தண்டவாளங்களை ரூ.2.53 கோடியில் அகற்ற ஒப்பந்தம் விடப்பட்டிருந்தது.

அதன்படி, பிப்ரவரி முதல் மே மாதம் வரையிலான 4 மாதங்களுக்கு பழைய பாம்பன் ரயில் பாலத்தை அகற்றும் பணிகள் நடைபெற உள்ளன. இதையடுத்து, 4 மாதங்களுக்கு பாம்பன் தூக்குப்பாலம் வழியாக கப்பல், படகுகள் கடந்து செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. பாலத்தை அகற்றும் பணிக்கான கருவிகள் மற்றும் இயந்திரங்கள் பாம்பனுக்கு விரைவில் கொண்டு வரப்பட உள்ளன" என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+