தேன்கனிக்கோட்டையில் பரவிய மனித வாசனை.. குட்டையில் துள்ளிய ஜீவன்! கிருஷ்ணகிரியில் நெகிழ்ச்சி சம்பவம்
கிருஷ்ணகிரி: தேன்கனிக்கோட்டையில் யானைக்குட்டிக்கு என்ன ஆச்சோ என்று கிருஷ்ணகிரி மக்கள் பதறிப்போய்விட்டார்கள்.. யானை குட்டியை உடனடியாக மீட்டு, அதன் தாயிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தபடி இருந்தனர்.. இந்நிலையில், வனத்துறையினர் யானைக்குட்டியை பாதுகாப்பாக மீட்டுள்ளனர். என்ன நடந்தது?
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே உளிபண்டா வனப்பகுதி உள்ளது. இங்கிருந்து யானைகள், கரடிகள், சிறுத்தைகள், மான்கள், காட்டு எருமைகள், காட்டுப் பன்றிகள் போன்ற பல்வேறு வனவிலங்குகளின் இருப்பிடமாக உள்ளது..

கிருஷ்ணகிரி வனக்கோட்டம்
குறிப்பாக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூர் வனக்கோட்டத்தின் ஒரு பகுதியாக இருப்பதால், கோடைக்காலத்தில் குடிநீர் மற்றும் உணவுப் பற்றாக்குறையை சமாளிக்க வனத்துறையினர் நீர்க்குட்டைகளை நிரப்புதல் மற்றும் தீவனப் புல்வெளிகளை அமைத்தல் போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர்.
எனினும், யானை, மான், காட்டுப்பன்றி போன்ற விலங்குகள் இயல்பான பாதையில் நகரும் போது தேன்கனிக்கோட்டை வழியாக வருவது தவிர்க்க முடியாததாகிறது... காட்டுக்குள் உணவும் தண்ணீரும் குறையும் காலங்களில், விலங்குகள் இந்த பயிர் நிலங்களை நோக்கி வர ஆரம்பிக்கின்றன
தேன்கனிக்கோட்டை குட்டை
அப்படித்தான், தேன்கனிக்கோட்டைக்கு உளிபண்டா காட்டில் இருந்து கடந்த 4-ந் தேதி யானைகள் சில கூட்டமாக வந்தன.. இங்குள்ள குட்டையில் அந்த யானைகள் தண்ணீர் குடித்து கொண்டிருந்தன..
அப்போது 6 மாத குட்டி யானை, அங்குள்ள குட்டையில் தவறி விழுந்தது. இதைப்பார்த்த மற்ற யானைகள், நீண்ட நேரமாக அந்த குட்டியை மீட்க போராடின.. ஆனால், அந்த யானைகளால் குட்டியை மீட்க முடியவில்லை.. இதனால் அங்கிந்து அனைத்து யானைகளும் திரும்பி காட்டுக்கே சென்று விட்டன.
மனித வாசனை பரவியது
இந்த நிலையில் ரோந்து சென்ற ஜவளகிரி வனத்துறையினர், அந்த குட்டி யானையை பொக்லைன் எந்திரம் உதவியுடன் மீட்டு தாய் யானையுடன் சேர்க்க நடவடிக்கை எடுத்தனர். இதற்காக யானை கூட்டத்துடன் வந்து, குட்டி யானையை மீட்க முயன்றனர்..
ஆனால், மனிதர்கள் வாசனை குட்டி யானை மீது பரவியதால், யானைகள் கூட்டம், அதை சேர்த்துக் கொள்ளவில்லை.
பொதுவாக, குட்டி யானைகளுக்கு மனித வாடை இயல்பாகவே பிடிக்காது. காரணம், யானைகளின் மூக்கு மிகவும் கூர்மையானது; அதனபால் மனிதரின் வாசனை யானைகளுக்கு அந்நியமாகவும் ஆபத்தாகவும் தோன்றுமாம்..
யானை கூட்டம்
ஒரு குட்டி யானையை மனிதர்கள் தொடும்போது, அந்த மனித வாடை அதன் உடலில் ஒட்டிவிடுகிறது. பிறகு தாய் யானை அந்த வாடையை உணரும்போது, குட்டியை அடையாளம் காண முடியாமல் அல்லது சந்தேகத்துடன் பார்த்து, சில சமயம் அருகில் செல்லாமல் விலகிவிடும்.. அதனால் தான் நல்ல மனதோடுகூட காட்டு யானைக் குட்டிகளை மனிதர்கள் தொடக் கூடாது என்பார்கள்.
அப்படித்தான் இந்த குட்டி யானையும் வனத்துறையினர் மீட்க சென்றும், ஒதுங்கி மிரண்டது. அங்கிருந்த மற்ற யானைகளும் வனத்துறையினரை நெருங்க விடாமல் செய்தன.. இப்படியே 25 நாட்களுக்கும் மேலாக வனத்துறையினர் முயற்சி செய்தும் பலனளிக்கவில்லை.
குட்டி யானை மெலிந்தது
ஒருகட்டத்தில் அந்த குட்டியானை சோர்வாக காணப்பட்டது.. தாயை காணாமல், பால் குடிக்காமல், உணவு உட்கொள்ளாமல் சோர்ந்து போய்விட்டது.. உடலும் மெலிந்துவிட்டது.. இதற்கு மேல் விட்டால் குட்டி யானையின் உயிருக்கே ஆபத்தாகிவிடும் என்பதால், அந்த குட்டியை அதன் தாயுடன் சேர்க்க வேண்டும். இல்லாவிட்டால் அதை முதுமலை காப்பகத்தில் சேர்க்க வேண்டும் என்று வன உயிரின ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இதையடுத்து, வனத்துறையினர் அந்த 6 மாத குட்டி யானையை மீட்டனர்.. வேன் மூலமாக, முதுமலை தெப்பக்காட்டில் உள்ள யானைகள் முகாமில் நேற்று பாதுகாப்பாக கொண்டு போய் சேர்த்தனர்...!!
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications