வீசிய அனல் காற்று… தவித்த சென்னைவாசிகள்.. 102 பாரன்ஹீட் வெப்பநிலை பதிவு
சென்னை: சென்னையில் நேற்று வீசிய அனல்காற்றுக்கு மக்கள் ஆடித்தான் போயினர். அக்னி நட்சத்திர காலகட்டத்தில் கூட இதுபோன்ற அனலை அனுபவித்திராத மக்கள் வீடுகளை விட்டு வெளியே வரவே அஞ்சினர். மீண்டும் 102 டிகிரி வெப்பநிலை பதிவாகியுள்ளதால் சென்னையில் புழுக்கம் அதிகரித்துள்ளது.
கடந்த வாரம் முழுவதும் சென்னையில் குளுகுளு சீதோஷ்ணமே நிலவியது. சாரல் மழையும், குளுகுளு காற்றும் இதமான சூழ்நிலையை ஏற்படுத்திய நிலையில் சென்னையில் நேற்று காலை முதல் மாலை வரை கடுமையான வெப்பக் காற்று வீசியது. அனல் காற்றுக்கு சென்னைவாசிகள் அவதிக்கு ஆளாகினர். பயணிகளும், வாகன ஓட்டிகளும் பாதிக்கப்பட்டனர்.

இது குறித்து கருத்து கூறிய சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி, வழக்கமாக நிலத்தில் காற்றின் அழுத்தம் குறையும்போது, கடலில் உள்ள ஈரப்பதமுள்ள காற்று நிலப்பகுதிக்கு வரும். திங்கட்கிழமையன்று நிலப்பகுதியில் காற்றின் அழுத்தம் குறையாததால் கடல் காற்று நிலப்பகுதியில் நுழைய முடியவில்லை. இதனால் வெப்பம் அதிகரித்து காணப்பட்டது. அதனால் ஏற்பட்ட காற்று சுழற்சி காரணமாக பலத்த வெப்பக் காற்று வீசியது என்றார்.
சென்னையில் அதிகபட்சமாக நேற்று 101.66 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலை பதிவானது. தமிழகத்தில் நேற்று அதிகபட்சமாக ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியில் 102 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவானது. திருச்சியில்,மதுரையில் 99 டிகிரி வெப்பநிலையும், கோவையில் 87 டிகிரி வெப்பநிலையும் பதிவாகியுள்ளது.
தமிழகத்தில் வெப்ப சலனம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் பல்வேறு பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications