கொளுத்தும் வெயில்... உடம்பெல்லாம் எரியுது... வெளியில் தலை காட்ட அஞ்சும் மக்கள்
நெல்லை: வெயிலின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருவதால், வெளியில் செல்ல அஞ்சி மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கின்றனர்.
இந்தாண்டு தமிழகத்தில் கோடை வெயில் மார்ச் இரண்டாவது வாரத்திலேயே தலை தூக்கி விட்டது. நாளுக்கு நாள் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், வருகிற மே முதல் வாரத்தில் அக்னி நட்சத்திரம் துவங்குகிறது. இந்த கத்தரி வெயிலின் தாக்கம் மே இறுதி வரை நீடிக்கும். இருப்பினும் ஜூன் முதல் வாரம் வரை வெயிலின் உக்கிரம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

106 டிகிரி வெயில்...
நெல்லையில் 5, 6ம் தேதிகளில் வெயிலின் தாக்கம் 106 டிகிரியை தாண்டி பதிவாகியுள்ளது. இதனால் பகலில் சாலைகளில் செல்பவர்கள் கடுமையான வெப்பத்தை உணர முடிகிறது.

வெளியில் வர அச்சம்...
சாலைகளில் நடந்து செல்பவர்கள் குடை பிடித்தபடியும், தலையில் துண்டை போட்டபடியும் செல்கின்றனர். தொடர்ந்து வெயில் கொளுத்துவதால் பகல் நேரங்களில் வெளியே தலை காட்ட முடியவில்லை.

இளநீர் கடைகளில் கூட்டம்...
வெயில் காரணமாக குளிர்பான கடைகளில் மக்கள் அதிக அளவில் கூடுகின்றனர். இது போல் சாலையோரம் உள்ள இளநீர் கடைகளிலும் மக்கள் அதிக அளவில் கூடுகின்றனர்.

கோடை மழை...
கோடை மழை இரண்டு நாட்களுக்கு முன்பு தலை காட்டியது. ஆனால் இப்போது சுத்தமாக மழை இல்லை. மாலையில் மேகம் திரண்டு வந்தாலும் மழை பெய்யவில்லை.

நோய்த் தாக்குதல்...
இந்த வெயிலின் தாக்கத்தால் முதியவர்கள் முதல் சிறுவர்கள் வரை பலர் வயிற்று கடுப்பு, கண் எரிச்சல் உள்ளிட்ட நோய்களுக்கு ஆளாகி வருகின்றனர்.
-
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு!












Click it and Unblock the Notifications