குற்றால அருவிகளில் அதிகாலையில் திடீர் வெள்ள பெருக்கு
குற்றாலம்: குற்றால அருவிகளில் இன்று அதிகாலையில் திடீர் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வங்கக் கடல் புயல் காரணமாகவும், வடகிழக்கு பருவமழையின் காரணமாகவும் வடமாவட்டங்களில் மட்டுமின்றி தென் மாவட்டங்களிலும் பலத்த மழை பெய்துவருகிறது.
இம்மழையின் காரணமாக பல மாவட்டங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. நேற்று மாலை முதல் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் பலத்த மழைபெய்து வருவதால் இப்பகுதியில் உள்ள நீர்த் தேக்கங்களுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து விவசாயப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் குறைந்த அளவே தண்ணீர் கொட்டிய குற்றால அருவிகளில் இன்று அதிகாலை 5.30 மணியளவில் தண்ணீரின் அளவு அதிகரித்து செம்மண் நிறத்தில் வெள்ளம் பாதுகாப்பு வளையத்தை தண்டி கொட்டவே அங்குள்ள வியாபாரிகள் ஐயப்ப பக்தர்களை குளிக்க செல்லவேண்டாம் என்று எச்சரிக்கை செய்து அனுப்பிவைத்தனர்.

இருப்பினும் சிலர் அதையும் மீறி பாதுகாப்பு வளையம் அருகேயுள்ள பகுதியில் ஓரமாக நின்று குளித்து சென்றனர். தற்போது சபரிமலை சீசன் என்பதால் அருவிகள் அருகே கூடுதல் போலீஸ் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா?












Click it and Unblock the Notifications