விடிய விடிய வெளுத்தெடுத்த மழை.... மனங்களை நிறைத்த பெரு வெள்ளம்!
சென்னை: சென்னை உள்பட தமிழகம் முழுவதும் நேற்று மாலை முதல் விடிய விடிய பெருமழை கொட்டித் தீர்த்தது. குறிப்பாக கடற்கரையோர மாவட்டங்களில் பேய் மழை எனும் அளவுக்கு மழை பெய்தது.
இதனால் மாநிலம் முழுக்க நீர்த்தேக்கங்கள்,. ஏரிகளில் கணிசமாக மழை நீர் நிரம்பியுள்ளது.

வங்கக் கடல் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று மாலை கரையை கடந்தது. இதன் காரணமாக வட மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் விடிய விடிய மழை பெய்தது. இப்போதும் மழை விட்டு விட்டு தொடர்கிறது.
இதனால் நேற்று இரவு முதல் சென்னை குடிநீர் ஏரிகளுக்கு மீண்டும் தண்ணீர் வரத் தொடங்கியது.
நேரம் ஆக ஆக நீர்வரத்து அதிகரித்தது. இன்று காலை குடிநீர் ஏரிகளுக்கு நீர் வரத்து மேலும் அதிகரித்தது.

கடந்த ஒரு வாரமாக மழை இல்லாததால் பூண்டி ஏரிக்கு நீர் வரத்து மிகக் குறைவாக இருந்தது. கிருஷ்ணா தண்ணீர் மட்டும் 100 கன அடி வந்து கொண்டிருந்தது. இபோது மழை காரணமாக பூண்டி ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இன்று காலை நிலவரப்படி 625 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதில் மழைநீர் 513 கன அடி, கிருஷ்ணா தண்ணீர் 112 கன அடி பூண்டி ஏரியில் நீர் இருப்பு 376 மில்லியன் கன அடியாக உள்ளது.
புழல் ஏரிக்கு 336 கன அடி தண்ணீர் வந்து கொண்டுள்ளது. ஏரியின் நீர் இருப்பு 1520 மில்லியன் கன அடி. செம்பரம்பாக்கம் ஏரியில் 816 மில்லியன் கன அடி தண்ணீர் இருப்பு உள்ளது. மழை காரணமாக தற்போது ஏரிக்கு 1240 கன அடி தண்ணீர் வந்து கொண்டுள்ளது.
சோழவரம் ஏரியில் 163 மில்லியன் கன அடி தண்ணீர் இருக்கிறது. ஏரிக்கு 23 கன அடி தண்ணீர் வருகிறது. மேலும் 2 நாட்கள் மழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. எனவே ஏரிகளில் நீர்மட்டம் மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் வேலூர் மாவட்டங்களிலும் கணிசமாக மழை பெய்துள்ளது. நீண்ட வருடங்களுக்குப் பிறகு வேலூர் மாவட்டத்தில் இரு தினங்கள் தொடர்ந்து மழை பெய்தததால், மாவட்டத்தின் பல ஏரிகளில் தண்ணீர் தேங்க ஆரம்பித்துள்ளது.
இது அந்த மாவட்ட மக்களை பெரு மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
-
50 கி.மீ வேகத்தில் காற்று.. இடி, மின்னலுடன் கொட்டப்போகும் பேய் மழை! 5 மாவட்டங்களுக்கு வார்னிங் -
சென்னையில் சம்பவம் இருக்கு.. ஹை அலர்ட் கொடுத்த வானிலை மையம்! உஷார் மக்களே! -
இந்தியாவை சூழும் புதிய பிரச்சனை! 64% நிலைமை மோசம்! சாட்டிலைட் படங்களில் தெரிய வந்த அதிர்ச்சி -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட்












Click it and Unblock the Notifications