சென்னையில் ‘பொத்துக்கொண்டு ஊற்றிய வானம்’... ஜிஎஸ்டி சாலையில் டிராபிக் ஜாம்
சென்னை: சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் தற்போது கனமழை பெய்து வருகிறது. சாலைகளில் வெள்ளம் போல் மழை நீர் ஓடுவதால், போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த மாதம் 28ம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கியது. குமரிக்கடல் பகுதியில் நிலைக்கொண்டிருந்த மேலடுக்கு சுழற்சி காரணமாக, தென் தமிழகத்தில் அனேக இடங்களிலும், தமிழகத்தின் பிற பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது. இந்த நிலையில், குமரிக்கடல் பகுதியில் நிலைக்கொண்டிருந்த அந்த மேலடுக்கு சுழற்சி, அங்கிருந்து மேற்கு நோக்கி நகர்ந்து, குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் நிலைகொண்டுள்ளது.

இதனால், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இன்று அனேக இடங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. அதிலும் குறிப்பாக, கடலோர மாவட்டங்களிலும், தென் தமிழகத்தின் உள் மாவட்டங்களிலும் கனமழை இருக்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால், சென்னையில் பல இடங்களில் காலை முதல் மேகமூட்டமான வானிலை நிலவியது. சில இடங்களில் வெயில் கொளுத்தியது.
ஆனால், சட்டென்று மாறியது வானிலை. தற்போது சென்னையின் பல இடங்களில் கனமழை பெய்து வருகிறது. சென்னை நந்தனம், வேளச்சேரி, தி.நகர், சைதாப்பேட்டை, தாம்பரம், குரோம்பேட்டை, புழுதிவாக்கம், மேடவாக்கம், துரைப்பாக்கம், அடையாறு, ராயப்பேட்டை உள்ளிட்ட இடங்களில் பலத்த மழை பெய்து வருகிறது.
கனமழை காரணமாக இப்பகுதிகளில் சாலையில் மழைநீர் வெள்ளம் போல ஓடுகிறது. இதனால் ஜிஎஸ்டி சாலை உள்பட பல்வேறு இடங்களில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
-
கார் விற்பனையில் மாஸ் காட்டும் கொங்கு மண்டலம்.. கோவை, பொள்ளாச்சி, திருப்பூர்காரங்க வேற ரகம் பாஸ்..! -
சென்னையில் இரவு நேரங்களில் அடிக்கடி மின்வெட்டு ஏற்படுவது ஏன்? அதிகாரிகளுக்கு மட்டுமே தெரிந்த உண்மை -
வரலாறு படைக்கும் Zoho.. டேட்டா சென்டர்களுக்கு உதவ புது சர்வர் உருவாக்கிய சென்னை நிறுவனம்! -
சென்னை பக்கம் திரும்பிய மழை.. இன்று திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்பட 9 மாவட்டங்களுக்கு அலர்ட் -
சென்னை ஃபுல்லா மாறப் போகுது.. போக்குவரத்து நெரிசலுக்கு பெரும் தீர்வு! ஐடிஎஸ்-ஐ கையிலெடுத்த ஆபீசர்ஸ் -
சென்னையை சுத்து போட்ட மழை மேகங்கள்.. நள்ளிரவு முழுக்க 15 மாவட்டங்களில் கொட்டும் மழை -
அடுத்த 1 மணி நேரம் உஷார்! கோவை டூ கன்னியாகுமரி.. 12 மாவட்டங்களில் கொட்டப்போகும் கனமழை! -
நடிகர் ரவி மோகனுக்கு பின்னடைவு! ஆர்த்திக்கு ஜீவனாம்சம் வழங்கும் விவகாரத்தில் உயர்நீதிமன்றம் அதிரடி! -
டமால் டுமீல் தான்.. 4 மாவட்டங்களில் வெளுத்து வாங்கப் போகுது கனமழை! மார்க் செய்த வானிலை ஆய்வு மையம்! -
சென்னையில் முதல்வர் விஜய் தொகுதியான பெரம்பூரில் அடிக்கடி மின் வெட்டு.. பொங்கி எழுந்த மக்கள் -
திமுக ஆட்சியில் போடப்பட்ட டெண்டர் ரத்து? ரூ.2,100 கோடி ECR திட்டத்திற்கு முட்டுக்கட்டை போட்ட விஜய் -
அடித்து பெய்யப்போகும் கனமழை! கோவை டூ கன்னியாகுமரி.. 7 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications