வெளுத்துக்கட்டும் மழை - திருவாரூர், நாகை மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை
கனமழை காரணமாக திருவாரூர், நாகை மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை: கனமழை காரணமாக திருவாரூர், நாகை மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
வங்கக் கடலில் ஏற்பட்ட காற்றழுத்தத் தாழ்வு நிலை மேற்கு நோக்கி நகர்ந்துள்ளது. இதனால் நவம்பர் 12ஆம் தேதி வரை தமிழகத்தின் கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்காலில் கனமழை பெய்யக்கூடும். மற்ற இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

சென்னை மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் கடந்த இரு தினங்களாக ஓய்ந்திருந்த மழை வெள்ளிக்கிழமை மீண்டும் பெய்யத் தொடங்கியுள்ளது.
வெள்ளிக்கிழமை முதல் வேளச்சேரி, பள்ளிக்கரணை, துரைப்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் சாரல் மழை பெய்தது பட்டினப்பாக்கம், மந்தைவெளி, மயிலாப்பூர் உள்ளிட்ட இடங்களில் மிதமான மழை பெய்தது
திருவாரூர் மாவட்டத்தில் நேற்று காலை முதலே கனமழை விட்டு விட்டு பெய்து வருகிறது. கனமழை பெய்து வருவதால் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
நாகை மாவட்டம் தலைஞாயிறு, வேதாரண்யம், சீர்காழி ஆகிய ஊர்களில் பலத்த மழை பெய்து வருகிறது.
கனமழை காரணமாக வருவதால் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து முதன்மை கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.
கடந்த வாரம் மழையால் பல மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டது. அதனை ஈடு செய்வதற்காக சனிக்கிழமையன்று பள்ளிகள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் மீண்டும் மழை பெய்வதால் இன்று நாகை, திருவாரூர் மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
-
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு












Click it and Unblock the Notifications