தமிழகத்தில் மழை வெள்ளத்திற்கு இதுவரை 347 பேர் பலி - தமிழக அரசு தகவல்
சென்னை: வடகிழக்கு பருவமழை தொடங்கியதில் இருந்து இதுவரை பல்வேறு சம்பவங்களில் பாதிக்கப்பட்டு 347 பேர் பலியாகியிருப்பதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் அண்மையில் கொட்டித் தீர்த்த கனமழைக்கு சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்கள் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகின.
தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மழை-வெள்ளம் பாதித்த இடங்களில் சிக்கியிருந்த 17 லட்சத்து 64 ஆயிரம் பேர் பத்திரமாக மீட்கப்பட்டு வெளியேற்றப்பட்டு அரசின் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர். முகாம்களில் தங்கியிருந்தவர்களுக்காகவும், மாடிகளில் சிக்கிக் கொண்டவர்களுக்கும் சேர்த்து இதுவரை ஒரு கோடியே 28 லட்சம் உணவுப் பொட்டலங்கள் விநியோகிக்கப்பட்டன.

இந்த மீட்பு நிவாரணப் பணிகளில், தமிழக காவலர்கள், தீயணைப்பு வீரர்களுடன் இணைந்து ஆயிரத்து 200 ராணுவ வீரர்களும், தேசிய பேரிடர் மீட்புக் குழுவைச் சேர்ந்த 48 குழுக்களும், 400 கடற்படை-கடலோர காவல் படையினரும், 7 ஹெலிகாப்டர்களும் ஈடுபடுத்தப்பட்டன.
தமிழகத்தில் கடந்த அக்டோபர் 1 ஆம் தேதி முதல் வடகிழக்கு பருவமழை தொடங்கியதில் இருந்து வெள்ளம் அடித்துச் செல்லப்பட்டது, மின்சாரம் தாக்கியது, சுவர் இடிந்து விழுந்தது என பல்வேறு சம்பவங்களின் மூலமாக உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகின்றன. இதுவரை மாநிலம் முழுவதும் 347 பேர் உயிரிழந்துள்ளதாக மாநில அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சம், பேரிடர் நிவாரண நிதியில் இருந்து வழங்கப்பட்டு வருகிறது. மேலும், குடிசைகள், கால்நடைகளை இழந்தோருக்கும் உரிய இழப்பீடுகள் அளிக்கப்படுகின்றன. அந்த வகையில், இதுவரை ஒரு லட்சத்து 11 ஆயிரத்து 278 பேரின் குடும்பங்களுக்கு ரூ.67.47 கோடி நிவாரண நிதியாக அளிக்கப்பட்டுள்ளது என தமிழக அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
-
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு












Click it and Unblock the Notifications