கர்நாடகத்தில் செம மழை... ஒகேனக்கல்லில் நீர்வரத்து அதிகரிப்பு
தருமபுரி: கர்நாடகத்தில் காவிரி நீர்ப்ப் பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக ஒகேனக்கல் அருவியில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.
கர்நாடக மாநிலத்தில் அமைந்துள்ள காவிரி நீர்ப் பிடிப்புப் பகுதிகளில் தற்போது மழை பெய்து வருவதால் அங்குள்ள கபினி, கிருஷ்ணராஜ சாகர் உள்ளிட்ட பெரும்பாலான அணைகளுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. இந்த அணைகளிலிருந்து சனிக்கிழமை திறந்து விடப்பட்ட உபரி நீர் தமிழக எல்லையான பிலிகுண்டுலு வழியாக ஒகேனக்கல் காவிரி ஆற்றுக்கு நேற்று வந்தடைந்தது.

இதன் காரணமாக, கடந்த சில நாள்களாக நீர் வரத்து குறைவாக காணப்பட்ட ஒகேனக்கல் அருவியில், தற்போது நீர்வரத்து கூடுதலாக உள்ளது. ஒகேனக்கல்லில் சனிக்கிழமை நொடிக்கு 6,000 கன அடியாக இருந்த நீர் வரத்து, நேற்று மாலை நிலவரப்படி அருவியில் நொடிக்கு 11,500 கன அடி நீர் வருவதாக பொதுப்பணித் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதையடுத்து தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல் அருவிக்கு விடுமுறை நாளான நேற்று சுற்றுலாப் பயணிகள் வருகை அதிக அளவில் இருந்தது. தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், திருவண்ணாமலை, பெங்களூரு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் தங்களது குடும்பத்துடன் சுற்றுலா வந்திருந்தது குறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications