சென்னையில் இடி மின்னலுடன் கனமழை.. மாலை மழையால் மக்கள் மகிழ்ச்சி

சென்னையில் இடி மின்னலுடன் பல இடங்களில் கனமழை பெய்துள்ளது. மாலை நேரத்தில் மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை மற்றும் புறநகர்களில் பலத்த மழை பெய்தது. இதனால் சென்னைவாசிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

சென்னையில் கடந்த சில நாட்களாகப் பகல் நேரங்களில் வெயில் காய்ந்தாலும் மாலை நேரங்களில் நல்ல மழை பெய்து வருகிறது. நேற்று மாலை சென்னையில் பெய்த கனமழையால் சாலை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

இந்நிலையில், இன்றும் சென்னையின் பல இடங்களில் பரவலாக பலத்த மழை பெய்துள்ளது.

கடலோரப் பகுதிகள்

கடலோரப் பகுதிகள்

சென்னையின் கடலோரப் பகுதிகளில் இன்று கனமழை பெய்தது. குறிப்பாக, புதுப்பேட்டை, சேப்பாக்கம், மயிலாப்பூர், திருவல்லிக்கேணி, ராயப்பேட்டை உள்ளிட்ட பல இடங்களில் பலத்த மழை பெய்தது.

இடி மின்னலுடன் மழை

இடி மின்னலுடன் மழை

அதே போன்று, வேளச்சேரி, சூளைமேடு, கோயம்பேடு, கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் மழை பெய்தது. இடி மின்னலுடன் பெய்த இந்த மழையால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

வேலூரில் பலத்த மழை

வேலூரில் பலத்த மழை

இதேப் போன்று தமிழகம் முழுவதும் பரவலாக பலத்த மழை பெய்துள்ளது. வேலூர், நாமக்கல், திண்டுக்கல் உட்படத் தமிழகத்தில் பரவலாகப் பலத்த மழை பெய்து வருகிறது.

மக்கள் மகிழ்ச்சி

மக்கள் மகிழ்ச்சி

கரூர், தேனி உள்ளிட்ட மாவட்டங்களிலும் பல இடங்களில் கனமழை பெய்துள்ளது. தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம் தீரும் என்ற நம்பிக்கையோடு மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+