பொத்துக்கிட்டு ஊத்துது வானம்.. பல மாவட்டங்களில் செம மழை.. மக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி!
தமிழகத்தின் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது
சென்னை: சேலம், விழுப்புரம், சிவகங்கை, புதுகை, நாகை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் தற்போது கனமழை பெய்து வருகிறது.
வெப்பச்சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாகவும், இதனால், மீனவர்கள் எச்சரிக்கையுடன் கடலுக்கு செல்ல வேண்டும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. மேலும் சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுவதுடன், மாலை அல்லது இரவில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் அறிவித்திருந்தது.

அதன்படி, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் தற்போது நல்ல மழை பெய்து வருகிறது. நாகை மாவட்டம் சீர்காழி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மாலையிலிருந்தே மழை தொடங்க ஆரம்பித்துவிட்டது. அதேபோல, சேலம் மாவட்டம் வாழப்பாடி சுற்றுவட்டார இடங்களில் கனமழை பெய்து வருகிறது. மேட்டுப்பட்டி, காரிப்பட்டி, எம்.பெருமாபாளையம் உள்ளிட்ட இடங்களிலும் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது.
புதுக்கோட்டை மாவட்டத்தை பொறுத்தவரை, திருமயம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும், சிவகங்கை மாவட்டத்தில் காரைக்குடி சுற்றுவட்டார பகுதிகளில் காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. அதேபோல விழுப்புரம் மாவட்டம் திருகோவிலூர் அரகண்ட நல்லூர், அந்திலி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் மழை பெய்துள்ளது.
இடியுடன் கூடிய கனமழை பெய்து வருவதால் அந்தந்த மாவட்ட மக்களும், விவசாயிகளும் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இதனால் முக்கிய சாலைகளில் நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. பல இடங்களில் வாகன போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது.
-
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications