மதுரை சுற்றுவட்டாரப் பகுதிகளில் வெளுத்து வாங்கிய மழை... மகிழ்ச்சியில் மக்கள்
மதுரை சுற்றுவட்டாரப் பகுதிகளில் கொட்டித் தீர்த்த மழையால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
மதுரை: மதுரையில் வெப்பம் வாட்டி வந்த நிலையில் நேற்று மாலை கொட்டித் தீர்த்த மழையால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கடுமையான வெயில் வாட்டி வதைத்து வந்தது. இந்நிலையில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் அவ்வப்போது கோடை மழைபெய்து வருகிறது.

மதுரை மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் நேற்று மாலை மழை கொட்டித் தீர்த்தது. மாநகர் பகுதியில் நேற்று மாலை 6.30 மணிக்கு அளவில் காற்றுடன் கூடிய பலத்த மழை பெய்தது. அனுப்பானடி, சிந்தாமணி, கோரிப்பாளையம், அண்ணாநகர், திருப்பரங்குன்றம் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாக மழை பெய்தது.
புறநகர் பகுதிகளில் சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக இடி, மின்னலுடன் கனமழை வெளுத்து வாங்கியது. மேலும், அலங்காநல்லுார், வாடிப்பட்டி, சோழவந்தான், பாலமேடு சுற்றுவட்டார பகுதிகளில் ஒரு மணி நேரம் கன மழை பெய்தது.
மழையின் காரணமாக சில இடங்களில் மின்சாரம் துண்டிப்பு ஏற்பட்டது. வடபழஞ்சி, தென்பழஞ்சி, மதுரை காமராஜர் பல்கலைக் கழகம் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 4 மணி நேரத்திற்கும் மேலாக மின்சாரம் இல்லாததால் பொது மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர்.
இதேபோல் கிருஷ்ணகிரி, பொள்ளாச்சி, சேலம், மேட்டூர் உள்ளிட்ட பல இடங்களில் கனமழை பெய்தது. சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் பெய்த கனமழையின் காரணமாக மின்சாரம் துண்டிப்பு ஏற்பட்டது.
-
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications