திண்டுக்கல் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வெளுத்து வாங்கிய மழை.. மக்கள் மகிழ்ச்சி! - வீடியோ
திண்டுக்கல் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கொட்டித் தீர்த்த மழையால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
Subscribe to Oneindia Tamil
திண்டுக்கல்: சுற்றுவட்டாரப் பகுதிகளில் கொட்டித் தீர்த்த மழையால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். திடீர் மழையால் ஆறு மற்றும் ஓடைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கடுமையான வெயில் வாட்டி வதைத்து வந்தது. இந்நிலையில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் அவ்வப்போது கோடை மழைபெய்து வருகிறது.

திண்டுக்கல் மாவட்டத்தில் நேற்று மாலை கோடைமழை கொட்டித் தீர்த்தது. சுமார் 2 மணி நேரத்துக்கும் மேலாக கொட்டித் தீர்த்த மழையால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
இந்த திடீர் மழையால் அப்பகுதியில் உள்ள ஆறுகள் மற்றும் ஓடைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. 2 ஆண்டுகளுக்குப் பின் மழை பெய்துள்ளதாக கூறிய அப்பகுதி மக்கள் இதனால் தண்ணீர் பிரச்சனை குறையும் என தெரிவித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications
