சேலத்தில் விடிய விடிய கொட்டிய பேய் மழை... நீரில் மூழ்கி பெண் பலி
சேலத்தில் விடிய விடிய கொட்டிய பேய் மழையால் பெண் ஒருவர் நீரில் மூழ்கி இறந்துவிட்டார்.
Recommended Video

சேலம்: சேலத்தில் இன்று விடிய விடிய கொட்டி தீர்த்த மழையால் பெண் ஒருவர் நீரில் மூழ்கி பலியாகிவிட்டார்.
தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை மற்றும் வெப்பசலனத்தால் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இந்நிலையில் சேலத்தில் இன்று காலை விடிய விடிய கனமழை கொட்டி தீர்த்தது.

இதனால் சாலைகளில் வெள்ளமாக மழை நீர் ஓடியது. தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது.
இந்த மழைநீரில் மூழ்கி சன்னியாசிகுண்டுவை சேர்ந்த புஷ்பா என்பவர் உயிரிழந்தார். அவரது உடலை மீட்ட போலீஸார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
சேலம் மாவட்டத்தில் விடிய விடிய பெய்த கனமழையால் 36.28 செ.மீ மழைப் பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக சேலத்தில் 13.38 செ.மீ., ஏற்காட்டில் 11.68 செ.மீ மழைப் பதிவாகியுள்ளது.
சேலம் மாவட்டத்தில் சராசரியாக 2.4 செ.மீ. மழைப் பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications