தொடரும் கனமழை: சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை
கோவை: தமிழகம் முழுவதும் தொடர்ந்து பெய்து வரும் கனமழையின் காரணமாக சென்னை, கோவை, நெல்லை உள்ளிட்ட பல மாவட்டங்களில் இன்று பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப் பட்டுள்ளது.
தமிழகத்தின் பல பகுதிகளில் தொடர்ந்து நான்காவது நாளாக கனமழை பெய்து வருகிறது. தீபாவளிப் பண்டிகை நாளை மறுதினம் கொண்டாடப் பட உள்ள நிலையில் இந்த கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கைப் பெரிதும் பாதிக்கப் பட்டுள்ளது.

இந்நிலையில், சென்னை, திருவள்ளூர், தஞ்சை, திருச்சி, நெல்லை, கோவை, திருப்பூர், ஈரோடு, கடலூர், நாகை, காஞ்சிபுரம், திருவண்ணாமலை மற்றும் திருவாரூர் உள்ளிட்ட இடங்களில் மழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப் பட்டுள்ளது.
சென்னை, திருவள்ளூர், கோவை, திருப்பூர், திருவாரூர் மற்றும் நெல்லையில் கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப் பட்டுள்ளது.
இதேபோல், புதுச்சேரியிலும் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.
நெல்லையில் இன்று மட்டுமின்றி, நாளையும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப் பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications