சென்னையில் ஜிலீர்.. கொட்டிய மழையால் தணிந்த வெப்பம்
சென்னை : பகலில் வெப்பம் வாட்டினாலும் மாலையில் இருந்து கொட்டி வரும் மழையால் அனல் தணிந்து இதமான சூழல் நிலவுகிறது. எனினும் கடும் மழையால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு சாலையில் தேங்கி போக்குவரத்தை பாதித்தது.
பகலில் வெப்பம், மாலையில் மழை என மாறி மாறி ஏற்படும் கால நிலையால் சென்னை மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.இன்று மாலை மயிலாப்பூர், ராயப்பேட்டை, வடபழனி, கிண்டி, உள்ளிட்ட பகுதிகளில் இடியுடன் மழை வெளுத்து வாங்கியது.

சென்னை உள்பட புறநகரான தாம்பரம், கூடுவாஞ்சேரி, பொத்தேரி உள்ளிட்ட இடங்களில் பலத்த மழை பெய்தது.
மேலும் புழுதிவாக்கம், வேளச்சேரி, மடிப்பாக்கம், பள்ளிக்கரணையிலும் இடி, மின்னலுடன் கனமழை பெய்தது. அப்பகுதிகள் அனைத்தும் மிக தாழ்வான பகுதிகள் என்பதால், மழை நீர் தேங்கியதையடுத்து பொதுமக்கள் வெகுவாக பாதிக்கப்பட்டனர்.
சைதாப்பேட்டை, குரோம்பேட்டை, பல்லாவரம் தாம்பரம் உள்ளிட்ட பகுதிகளில் சாலையில் மழை நீர் தேங்கியதால், போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.
சாதாரணமாகவே மாலை வேளைகளில் அந்த சாலைகளில் போக்குவரத்து கடுமையாக இருக்கும். மழை நீரும் தேங்கியதால், வாகனகங்கள் ஆமை போல் ஊர்ந்தே செல்ல நேர்ந்தது.

இதனால் அலுவலகம் முடிந்து வீடு திரும்பியவர்கள் கடுமையான போக்குவரத்து நெரிசலில் சிக்கி மழையை வசைபாடினர்.
திருவொற்றியூர், காசிமேடு, உள்ளிட்ட பகுதிகளிலும் இடியுடன் மழை கொட்டித் தீர்த்தது.
சென்னை மட்டுமல்லாது, திருச்சி, தஞ்சை, கும்பகோணம், நாகை, திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களிலும் கன மழை சுமார் ஒரு மணி நேரம் கொட்டியது
இந்நிலையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு தமிழகத்தின் கடலோரம் மற்றும் உள் மாவட்டங்களில் கன மழை நீடிக்கும் என்று சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.
புகைப்படம்: பிரபு
-
விஜய்-க்கு புது சவால்.. 13 மாசமாச்சு.. சென்னை ஏர்போர்ட் - கிளாம்பாக்கம் மெட்ரோ திட்டத்தை மறந்த மத்திய அரசு! -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
கத்திரி வெயில் முடிஞ்சுபோச்சு.. சென்னை உட்பட 5 மாவட்டங்களில் இன்று காலையிலேயே மழைக்கு வாய்ப்பு! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications