குன்னூர் சுற்றுவட்டார பகுதிகளில் விடிய விடிய இடி மின்னல் கனமழை.. மரங்கள் சாய்ந்ததில் வாகனங்கள் சேதம்

குன்னூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வீசிய சூறைக்காற்றில் 10க்கும் மேற்பட்ட மரங்கள் சாய்ந்ததில் வாகனங்கள் சேதமடைந்தன.

Subscribe to Oneindia Tamil

குன்னூர்: குன்னூர் பகுதியில் பலத்த காற்றுடன் பெய்த மழையால் 10க்கும் மேற்பட்ட இடங்களில் மரங்கள் சாய்ந்தன. இதில் வாகனங்களில் 4 பேர் காயமடைந்தனர்.

நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதியில் பலத்த காற்று மற்றும் இடி மின்னலுடன் கனமழை பெய்தது. விடிய விடிய கனமழை கொட்டித் தீர்த்தது.

Heavy rain thunder storm in Kunoor, Over 10 trees fell down

இந்த மழையுடன் காற்று பலமாக வீசியதால் உதகை மேட்டுப்பாளையம் நெடுஞ்சாலையில் 10 க்கு மேற்பட்ட இடங்களில் மரங்கள் சாலையின் குறுக்குகே விழுந்தது. குன்னூர் அருகே காந்திபுரம் பகுதியில் கேரளா கண்ணூரில் இருந்து காரில் கொண்டிருந்த சுற்றுலாபயணிகள் கார் மீது பெரிய மரம் ஒன்று விழுந்தது.

இதில் காரில் பயணம்செய்த ஷாகிர் என்பவர் படுகாயமடைந்து குன்னூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார். அவருடன் வந்த மாயன் மற்றும் ஓட்டுநர் குருவாயூரப்பன் காயமின்றி தப்பினார்.

இந்த வாகனத்தின் பின்னால் வந்த காரில் திருப்பத்தூர் பகுதியைச் சேர்ந்த முத்து மற்றும் பாரதி என்ற பெண் பயணித்தனர். இதில் பாரதிக்கு காயம்பட்டு குன்னூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள், பின்னால் வந்த அரசு பேருந்து அதிஷ்டவசமாக தப்பியதால் பயணிகளுக்கு எந்த காயமும் ஏற்படவில்லை.

அதிகாலையில் நடந்த இந்த விபத்தால் 4 மணிநேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதனால் 5 கிலோ மீட்டர் தூரம் வரைக்கும் இருபுறங்களிலும் வாகனங்கள் நின்றது.

இன்று அதிகாலை உதகை மேட்டுப்பாளையம் நெடுஞ்சாலையில் கனமழை காரணமாக 10 இடங்களில் மரம் விழுந்தது. குன்னூர் காந்திபுரம் பகுதியில் சுற்றுலாபயணிகள் கார் மீது மரம் விழுந்ததில் பெண் உட்பட இருவர் படுகாயமடைந்தனர். அவர்கள் குன்னூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+