மக்களுக்கு ஒரு நற்செய்தி.. வட தமிழகத்தில் மழை தொடருமாம்!
வட தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
சென்னை: வட தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கத்திரி வெயில் விடைபெற்றுள்ள நிலையில் வெப்ப சலனம் காரணமாக அவ்வப்போது மழை பெய்து வந்தது. இந்நிலையில் கடந்த 29ஆம் தேதி முதல் தென்மேற்கு பருவ மழை தொடங்கியது.
இதனால் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் தென் மாவட்டங்களில் நல்ல மழை பெய்து வருகிறது. சென்னையில் நேற்று முதல்முறையாக கோடை மழை வெளுத்து வாங்கியது.

சென்னையில் மழை
இந்நிலையில் சென்னை வானிலை மைய இயக்குநர் பாலச்சந்திரன் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது, சென்னை மற்றும் புறநகரில் ஓரிரு முறை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

சில நேரங்களில் மழை
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். சில நேரங்களில் மழை பெய்யும்.

மழை பெய்ய வாய்ப்பு
தெற்கு அரபிக்கடல் வங்கக்கடலில் தென்மேற்கு பருவகாற்று வலுவாக வீசுகிறது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சியும் நிலவுவதால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை பெய்ய வாய்ப்புள்ளது.

கனமழை தொடரும்
கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று தெற்கு ஆந்திரத்தில் சந்திப்பதால் தமிழகத்தில் மழை பெய்யும். அடுத்த 24 மணிநேரத்தில் வட தமிழகம், தென் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. வட தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழை தொடரும்.

9 செமீ மழை
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக வேலூரில் 9 செ.மீ மழை பெய்துள்ளது . ஜெயங்கொண்டம் மற்றும் கேளம்பாக்கத்தில் தலா 7 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.
-
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வெளுத்து வாங்கப் போகும் கனமழை! இரவோடு இரவாக 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! வானிலை மையம் எச்சரிக்கை -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications