வட மாவட்டங்களில் மழை பெய்யும்.. ஆனால் தாழ்வுநிலை ஆந்திரா போய் விட்டதாம்!
சென்னை: வங்கக் கடலில் ஏற்பட்டிருந்த குறைந்த காற்றழுத்த்த தாழ்வுநிலை ஆந்திரா நோக்கி நகர்ந்து விட்டது. இருப்பினும் வட மாவட்டங்களில் அனேக இடங்களில் இன்று மழை பெய்யலாம் என்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் எஸ்.ஆர்.ரமணன் தெரிவித்துள்ளார்.
வட கிழக்குப் பருவ மழை தொடங்கியுள்ளது. இருப்பினும் பெரிய அளவிலான மழை இன்னும் ஆரம்பிக்கவில்லை. லேசான மழைதான் இதுவரை சென்னையைப் பொறுத்தவரை பெய்துள்ளது.

இந்த நிலையில் வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை உருவாகியிருப்பதால் அதனால் சென்னை உள்பட தமிழகத்திற்கு பரவலாக நல்ல மழை கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் தற்போது இந்த தாழ்வுப் பகுதியானது ஆந்திராவை நோக்கி நகர்ந்துள்ளது. இதனால் மழை குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேசமயம், தமிழகத்தின் வட மாவட்டங்களில் இன்று அனேக இடங்களில் மழை பெய்யும் என்று ரமணன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் வட கிழக்கு பருவமழை தொடங்கி உள்ளது. இந்த நிலையில் வங்க கடலில் உருவான தீவிர குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஆந்திரா நோக்கி நகர்ந்துள்ளது.
அதாவது அது மத்திய மேற்கு மற்றும் தென் மேற்கு வங்க கடலில் ஆந்திரா அருகே மையம் கொண்டுள்ளது. இருப்பினும் தமிழ்நாட்டில் வடக்கு மாவட்டங்களில் இன்று அநேக இடங்களில் மழை பெய்யும். ஒரு சில இடங்களில் கனமழை பெய்யும். மற்ற மாவட்டங்களில் சில இடங்களில் மழை பெய்யும் என்று கூறியுள்ளார்.
எதுக்கும் குடையை கையில் பிடித்தபடியே வெளியில் போய் வாருங்கள்...!
-
வெளுத்து வாங்கப் போகும் கனமழை! இரவோடு இரவாக 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! வானிலை மையம் எச்சரிக்கை -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications