அந்தமான் அருகே புயல் சின்னம்! கடலூர், காரைக்கால், நாகையில் புயல் எச்சரிக்கை!!
Subscribe to Oneindia Tamil
கடலூர்: அந்தமான் அருகே குறைந்த காற்றழுத்த தாழ்வு மையம் உருவாகியுள்ளதால் கடலூர், காரைக்கால், நாகப்பட்டினத்தில் 1ஆம் எண் புயல் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

அந்தமான் அருகே 490 கி.மீ. தொலைவில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மையம் உருவாகியுள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வுநிலை வலுவடைந்து மியான்மர் நோக்கி நகரும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு மையத்தால் காற்று வேகமாக வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டது.
இதையடுத்து, காரைக்கால், கடலூர், நாகப்பட்டினம் துறைமுகங்களில் 1ஆம் எண் புயல் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications