சென்னை மற்றும் புறநகரங்களில் நள்ளிரவில் இடியுடன் கனமழை
சென்னை: சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் நள்ளிரவில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்தில் ஒருசில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னையை பொருத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும், மாலை அல்லது இரவு நேரங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில், சென்னை மற்றும் புறநகரங்களில் இடியுடன் கூடிய கனமழை நள்ளிரவில் பெய்தது. நுங்கம்பாக்கம், கிண்டி, வேளச்சேரி, தரமணி, கந்தன்சாவடி, வண்டலூர், பூந்தமல்லி பகுதிகளில் கனமழை பெய்தது.
சேப்பாக்கம், திருவல்லிக்கேணி, மாதவரம், மீஞ்சூர், பெரம்பூர், கொடுங்கையூர், செங்குன்றம் உட்பட பல்வேறு பகுதிகளில் இடியுடன் மழை பெய்தது. கோயம்பேடு, விருகம்பாக்கம், மீனம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளிலும் பரவலாக கனமழை பெய்தது. இதனால் சாலைகளில் மழை நீர் தேங்கி நின்றது.












Click it and Unblock the Notifications