காய்ந்த பூமியை குளிர்விக்க வந்தது குளு குளு கனமழை... ராமநாதபுர விவசாயிகள் குஷி
மழையே இல்லாமல் காய்ந்து கிடந்த ராமநாதபுரத்தில் தற்போது கனமழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள மக்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
ராமநாதபுரம்: வடகிழக்கு மழை பொய்த்துப் போய் பயிர்கள் காய்ந்து விவசாயிகள் வேதனையில் மூழ்கி இருந்தனர். குடிநீருக்கே தட்டுப்பாடு வரும் நிலையில் பொதுமக்கள் அச்சத்தில் இருந்தனர்.
தமிழகத்தில் கடந்த ஆண்டு ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான தென்மேற்கு பருவமழை காலத்திலும், அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான வடகிழக்கு பருவமழைக் காலத்திலும் எதிர்ப்பார்த்த அளவில் மழை பெய்யவில்லை.
வடகிழக்கு பருவமழை இந்த ஆண்டு 65 சதவீதம் அளவிற்கு குறைவாகவே பெய்துள்ளது. இதனால் நீர் நிலைகள் வறண்டு வருகின்றன. வரலாறு காணாத வறட்சியின் காரணமாக பல மாவட்டங்களில் குடிநீர் பிரச்சினை தலைதூக்கியுள்ளது.

குடிநீர் பிரச்சினை
வறட்சியும், வெயிலும் ஒரு பக்கம் வாட்டி எடுக்க குடிநீர் பிரச்சனை தமிழகத்தில் தலை தூக்கியுள்ளது. ஒரு குடம் நீர் ரூ. 10 முதல் 15 வரை பல இடங்களில் விற்கப்பட்டு வருகின்றன. மேலும், குடங்களுடன் பெண்கள் சாலைகளில் அலைந்து திரிந்து நீரை பிடித்து வருகின்றனர்.

குளு குளு அறிவிப்பு
இந்நிலையில், வானிலை மையம் தென் மாவட்ட கடலோர பகுதிகளில், இரு தினங்களுக்கு மழை பெய்யும் என்று வானிலை மையம் குளு குளு அறிவிப்பை வெளியிட்டிருந்தது. மார்ச் 3ம் தேதி தென் மாவட்டங்களில் மழை பெய்யும் என்று அறிவித்திருந்தது.

வந்தேவிட்டது மழை
வானிலை மையம் சொன்னது போன்றே இன்று ராமநாதபுரத்தில் கனமழை பெய்து வருகிறது. முதுகுளத்தூர், கமுதி ஆகிய பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது. கனமழை காரணமாக அப்பகுதி மக்கள் மற்றும் விவசாயிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதே போன்று வேதாரண்யம் பகுதிகளிலும் நல்ல மழை பெய்து வருகிறது.

போட்டெடுக்க போகும் கோடை
இந்த 2 நாட்களில் மழை பெய்தாலும், இதற்கடுத்து வரும் நாட்களில் கோடை வறுத்தெடுக்கும் என்று கூறப்பட்டுள்ளது. எந்த ஆண்டும் இல்லாத அளவிற்கு இந்த ஆண்டு வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது மக்களை கொஞ்சம் கலக்கமடையச் செய்துள்ளது.
-
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
வெளுத்து வாங்கப் போகும் கனமழை! இரவோடு இரவாக 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! வானிலை மையம் எச்சரிக்கை -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications