ஹெல்மெட் சோதனை கெடுபிடியில் கடந்த வாரமும் திருச்சியில் பெண் பலி!
ஹெல்மெட் அணியாததால் போலீஸ் கெடுபிடிக்கு பயந்து வாகனத்தை வேகமாக ஓட்டிச் சென்ற இளைஞரால் திருச்சியில் கடந்த வாரம் பெண் ஒருவர் பலியாகியுள்ளார்.
Recommended Video

திருச்சி: திருச்சியில் ஹெல்மெட் அணியாமல் சென்ற இளைஞர் ஒருவர் போலீசார் கையில் சிக்காமல் இருக்க வாகனத்தை வேகமாக ஓட்டிச் சென்றதில் பெண் ஒருவர் கடந்த வாரத்தில் உயிரிழந்துள்ளார்.
திருச்சி திருவெறும்பூர் பகுதியில் ஹெல்மெட் போடாமல் சென்ற தம்பதியை போக்குவரத்து காவல் ஆய்வாளர் விரட்டிச் சென்று வாகனத்தை உதைத்துத் தள்ளியதில் கர்ப்பிணிப் பெண் உஷா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தமிழக மக்கள் மத்தியில் காவல் ஆய்வாளரின் இந்த அத்துமீறிய செயல் கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் கடந்த வாரத்திலும் பெண் ஒருவர் டூவீலர் மோதி உயிரிழந்துள்ளது தெரியவந்துள்ளது. சாலையில் நடந்து சென்றுகொண்டிருந்த பெண் மீது போலீசுக்கு பயந்து வேகமாக வந்த இளைஞரின் வாகனம் மோதி பெண் உயிரிழந்துள்ளார்.

திமுக பிரமுகரின் மனைவி சரஸ்வதி
திருச்சி எடத்தெரு பகுதியை சேர்ந்த சரஸ்வதி என்பவர் கடந்த பிப்ரவரி 25ம் தேதி காஜாபேட்டை ரோட்டோரத்தில் நடந்து சென்று கொண்டிருந்துள்ளார். இவர் இந்தப் பகுதி திமுக பிரமுகரின் மனைவி.

போலீசிடம் தப்பிக்க இளைஞர் முயற்சி
அப்போது அந்தப் பகுதியில் வடக்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்துள்ளனர். ஹெல்மெட் அணியாமல் இரு சக்கர வாகனத்தில் வந்த இளைஞர் போலீசார் பிடியில் சிக்காமல் தப்பிக்க வேகமாக வாகனத்தை ஓட்டிச் சென்றுள்ளார்.

பெண் மீது வாகனம் மோதியது
அப்போது வாகனம் சரஸ்வதி மீது மோதியதில் அவர் பலத்த காயமடைந்தார். இதனையடுத்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட சரஸ்வதி பிப்ரவரி 25ம் தேதி இரவு உயிரிழந்துள்ளார்.

சரஸ்வதி உயிரிழப்பு
ஹெல்மெட் கெடுபிடி காரணமாக பெண் ஒருவர் விபத்தில் உயிரிழந்த சம்பவம் அந்தப் பகுதியினரை சோகத்தில் ஆழ்த்தியது. இந்நிலையில் தான் நேற்று திருச்சி திருவெறும்பூர் சாலையில் அதே ஹெல்மெட் கெடுபிடி காரணாக கர்ப்பிணிப் பெண்ணின் உயிர் அநியாயமாக பறிபோயுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications