ஆஃபர்னா இதுதான்யா தீபாவளி ஆஃபர்... சின்னமனூர் பாரின் அதிரடி விளம்பரம்!
தீபாவளிக்கு துணிக்கடை, பட்டாசு கடை, எலக்ட்ரானிக்ஸ் கடைகள் ஆஃபர் மேல் ஆஃபர் தர சின்னமனூர் பார் இவற்றையெல்லாம் தூக்கிசாப்பிடும் அதிரடி ஆஃபரை அளித்துள்ளது.
தேனி : தீபாவளிக்கு வாடிக்கையாளர்களை கவர கடைகள் போட்டி போட்டு தள்ளுபடி அளிக்கும் நிலையில் தேனி மாவட்டம் சின்னமனூரில் தனியார் பார் ஒன்று அதிரடியான ஆஃபரை அறிவித்து விளம்பரம் செய்துள்ளது.
தீபாவளி கொண்டாட்டத்தை தீர்மானிப்பதில் வரிசைகட்டும் ஜவுளிக்கடைகள், பட்டாசுக் கடைகளின் தள்ளுபடிகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. 50 சதவீதம் தள்ளுபடி, இலவசத்திற்கு மேல் இலவசம் தள்ளுபடி விலையில் பொருட்கள் என்று செய்தித்தாள்களிலும், தொலைக்காட்சிகளிலும், ரேடியோக்களிலும் விளம்பரங்கள் அனல் பறக்கின்றன.

இந்த விளம்பரங்களுக்கு ஈடாக தேனி மாவட்டம் சின்னமனூரைச் சேர்ந்த தனியார் பார் நிறுவனம் ஒன்றும் வித்தியாசமான தள்ளுபடியை அறிவித்துள்ளது. தேனி மெயின் ரோட்டில் நேதாஜி பஸ்ஸ்டாண்ட் அருகில் சின்னமனூரில் இயங்கும் வானவில் பார் தீபாவளி வாழ்த்துகளை கூறியுள்ளது.
மேலும் தீபாவளிக்காக இந்த பார் அதிரடி ஆஃப்ரையும் அறிவித்துள்ளது. 10 குவாட்டர் வாங்கினால் 1 குவாட்டர் இலவசம், 10 பீர் வாங்கினால் ஒரு பீர் இலவசம் என்று குடிமகன்களுக்கு குஷியான அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.
இதே போன்று 5 குவாட்டர் வாங்கினால் ஒரு கட்டிங் இலவசம், எப்பொழுதும் 5 வகை சைட் டிஷ் இலவசம் என்றும் விளம்பரப்படுத்தப்பட்டுள்ளது. டாஸ்மாக் விற்பனைக்கே சவால் விடும் வகையில் அதிரடி ஆஃபர்களை அறிவித்து தனியார் பார் விளம்பரம் செய்துள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications