தனி நபர் அந்தரங்கத் தகவல்களை புட்டு புட்டு வைக்கும் ஆதார்... அதுதான் சிக்கலே! #Aadhar
தனி நபர் குறித்த அத்தனை விஷயங்களும் ஆதார் அட்டையில் இடம்பெறுவதாலேயே அதனை கட்டாயமாக்குவதை மக்கள் எதிர்க்கின்றனர்.
சென்னை : ஆதார் எண் தனி மனித அடையாளத்திற்காக எடுக்கப்படுவதாக அறிவித்துவிட்டு தற்போது எல்லா திட்டங்களுக்கும் ஆதார் கட்டாயம் என்ற நிலை கொண்டு வரப்பட்டுவிட்டது, தனி நபர் குறித்த அனைத்து விவரங்களும் இதில் இடம்பெற்றிருப்பதாலேயே இதனை கட்டாயப்படுத்துவதை மக்கள் எதிர்க்கின்றனர்.
இந்தியாவில் இருக்கும் எவரும் இனி ஆதார் இல்லாமல் இருக்க முடியாது என்று நினைக்கும் அளவிற்கு இந்த ஆதார் அட்டையை கட்டாயமாக்கி மக்களுக்கு நெருக்கடி தந்தது மத்திய அரசு.
ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் திட்டமிடப்பட்ட இந்த ஆதார் அட்டை கட்டாயமாக்கும் திட்டம், தற்போது தேசிய ஜனநாயக முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் நிறைவேற்றப்பட்டு வருகிறது.

தனக்கான அடையாளத்தை பெறுவதற்கான எண்
ஆதார் அட்டை என்பது ஒவ்வொரு இந்தியக் குடிமகனும் தனக்கான அடையாளத்தை பெறுவதற்கான எண் கொண்டது மட்டுமே என்று முதலில் கூறப்பட்டது. ஆனால் ஆதார் அட்டைக்காக பதிவு செய்யும் போது தனி நபரின் விழிப்படலம், கைவிரல் ரேகை என்று அனைத்து விவரங்களும் பதிவு செய்யப்படுகிறது.

ஏன் அவசியம்?
0 வயது முதல் 5 வயது வரையிலான குழந்தைகளுக்குக் கூட இந்த விவரங்கள் சேகரிக்கப்பட்டு ஆதார் அட்டை வழங்கப்படுகிறது. ஆதார் என்பது வெறும் அடையாள அட்டை என்பதைத் தாண்டி குடிமகன் பெறும் அனைத்து அரசு உதவிகள், மானியத்திற்கும் இது அவசியமாக்கப்பட்டது.

தனி நபர் சுதந்திரம் எங்கே?
கேஸ் மானியம் பெற, வங்கி எண்ணுடன் ஆதார் இணைக்க வேண்டும் என்று தொடங்கி ஆதாரை கட்டாயமாக்கும் பணி தற்போது, ரேஷன் மானியம் பெற ஆதார் எண் இணைப்பு, வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய ஆதார் எண் என்று எல்லாம் ஆதார் மயமாகிவிட்டது. அரசு அல்லது நிறுவனங்கள் சார்பில் வழங்கப்படும் அடையாள அட்டைகள் அவர்களை அடையாளம் காண்பதற்காக மட்டுமே இருக்க வேண்டுமே தவிர அதில் தனி நபரை நோட்டமிடும் விவகாரங்கள் இருக்கக் கூடாது என்பதே மக்களின் கருத்து

கொந்தளிக்கும் மக்கள்
ஆதார் எண் என்ற ஒன்று மட்டும் இருந்து விட்டால் போதும், தனி நபரின் அனைத்து பணப் பரிமாற்றங்களையும் எங்கிருந்தோ யாரோ ஒருவர் நம்மை கண்காணித்துக் கொண்டிருக்கிறார் என்பது தான் உறுத்தலான விஷயம் என்று கொந்தளிக்கின்றனர் மக்கள். அதுமட்டுமின்றி தனி நபரின் சுதந்திரம் என்பது இதில் எங்கே இருக்கிறது. சுதந்திர நாட்டிலும் கூட சுதந்திரமில்லாத நிலையில் வாழவேண்டியுள்ளது என்பதே மக்கள் ஆதார் அட்டையை திட்டங்களுக்கு கட்டாயமாக்குவதை எதிர்ப்பதற்கான காரணமாக சொல்லப்படுகிறது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications