சென்னையில் நாயுடுவுக்கு சொந்தமான ஹெரிட்டேஜ் ப்ரஷ் சூப்பர் மார்க்கெட் மீது தாக்குதல்!!
சென்னை: 20 தமிழரை படுகொலை செய்ததைக் கண்டித்து ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு சொந்தமான ஹெரிட்டேஜ் ப்ரஷ் சூப்பர் மார்க்கெட் மீது தமிழ் உணர்வாளர்கள் தாக்குதல் நடத்தினர்.

திருப்பதி அருகே 20 தமிழர்களை ஆந்திரா காவல்துறை சுட்டுப் படுகொலை செய்தது. இந்த படுகொலைக்கு ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடுவே உத்தரவிட்டிருந்தார் என்றும் கூறப்படுகிறது.

இந்த படுகொலைக்கு எதிராக தமிழகம் கொந்தளித்துக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் சென்னை மயிலாப்பூரில் சந்திரபாபு நாயுடுவுக்கு சொந்தமான ஹெரிட்டேஜ் ப்ரஷ் என்ற சூப்பர் மார்க்கெட் விற்பனை நிறுவனம் மீது தமிழ்த் தேசிய எழுச்சி இயக்கத்தினர் தாக்குதல் நடத்தினர். (இந்தியா முழுவதும் உள்ள ஹெரிட்டேஜ் ப்ரஷ் சூப்பர் மார்க்கெட் கடைகள் நாயுடு குடும்பத்துக்கு சொந்தமானவை)

கடையின் முன்புற பலகைகள், கண்ணாடிகளை உடைத்து நொறுக்கியதுடன் உள்ளே நுழைந்தும் தாக்குதல் நடத்தினர். இதில் பணியாளர்கள், வாடிக்கையாளர்கள் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை.

பின்னர் போலீசார் தமிழ்த் தேசிய இயக்கத்தினர் இருவரையும் கைது செய்தனர். இத்தாக்குதலைத் தொடர்ந்து சென்னை கோபாலபுரத்தில் உள்ள ஹெரிட்டேஜ் ப்ரஷ் கடையின் மற்றொரு கிளை உடனடியாக மூடப்பட்டது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications