திமுக தலைவர் கருணாநிதி மீது விசாரணை கமிஷன் அமைக்க கோரிய மனுவை சென்னை ஹைகோர்ட் தள்ளுபடி செய்தது
சென்னை: கடந்த 2006-2011 ஆம் ஆண்டு திமுக ஆட்சி காலத்தின்போது நடந்த முறைகேடுகள் தொடர்பாக அக்கட்சித் தலைவர் கருணாநிதி உள்ளிட்டோர் மீது விசாரணை கமிஷன் அமைக்க உத்தரவிடக்கோரி தாக்கல் செய்த மனுவை சென்னை ஹைகோர்ட் தள்ளுபடி செய்தது.
வழக்கறிஞர் பாலசுப்பிரமணியன் என்பவர் சென்னை ஹைகோர்ட்டில் ஒரு மனுதாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின் கொடுத்த பேட்டியில், கடந்த 2006-11 ஆம் ஆண்டில் நடந்த ஆட்சியில் ஊழல், முறைகேடுகள் நடந்திருக்கலாம் என்று தெரிவித்துள்ளார். இவ்வாறு அவர் பேசியதாக பத்திரிகையில் செய்தி வெளிவந்துள்ளது.

ஒரு சட்டமன்ற உறுப்பினராக உள்ள அவர், இவ்வாறு தெரிவித்து இருப்பது சட்டத்துக்கு புறம்பானது. எனவே, ஸ்டாலின் சொன்னது போல, திமுக ஆட்சியில் முறைகேடுகள் நடந்துள்ளதா? என்பது குறித்து கண்டறிய, அப்போதைய முதல் அமைச்சராக இருந்த கருணாநிதி உள்ளிட்டவர்களிடம் விசாரணை நடத்த ஆணையம் அமைக்க அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று அந்த மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் வக்கீல் பாலசுப்பிரமணியன் ஆஜராகி வாதிட்டார். அப்போது நீதிபதி, பத்திரிகையில் வந்த அவரது பேட்டியை வைத்து வழக்கு போட்டு உள்ளீர்கள். சரி, அவர் கூறியதாக சொல்லும் ஊழல் குறித்த குற்றச்சாட்டுகளுக்கு உங்களிடம் ஆதாரங்கள் உள்ளதா?. என்று கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
-
Vairamuthu: கருணாநிதியின் 103-வது பிறந்தநாள்.. கவிதையால் புகழாரம் சூட்டிய வைரமுத்து -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்?












Click it and Unblock the Notifications