கடலூர் ஸ்டேடியத்தை சேதப்படுத்திய வழக்கு – ஜெ.வுக்கு விளக்கம் கேட்டு ஹைகோர்ட் நோட்டீஸ்!
சென்னை: ஹெலிக்காப்டர் தளம் அமைப்பதற்காக விளையாட்டு மைதானத்தினை சேதப்படுத்திய வழக்கில், திங்கள் கிழமைக்குள் விளக்கம் கேட்டு முதல்வர் ஜெயலலிதாவுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது சென்னை உயர்நீதிமன்றம்.
திமுக மாணவரணி செயலாளர் இள.புகழேந்தி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்தார். அதில் கடந்த நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்திற்காக ஜெயலலிதா ஹெலிகாப்டரில் கடலூர் சென்றார்.

இதற்காக கடலூர் அண்ணா விளையாட்டு மைதானத்தை சேதப்படுத்தி ஹெலிகாப்டர் தளம் அமைத்திருந்தனர். இதனால் அங்கு விளையாட்டு போட்டிகள் நடத்த முடியாத நிலை ஏற்பட்டது.
எனவே விளையாட்டு மைதானத்தை சீரமைக்க வேண்டும் எனக் கூறியிருந்தார். அவர் சார்பாக வழக்கறிஞர்கள் நீலகண்டன், ஜெரால்டு ஆகியோர் ஆஜராகினர்.
வழக்கை பரிசீலித்த நீதிபதி ராமசுப்பிரமணியம், சீரமைக்கும் பொறுப்பை தமிழக அரசு ஏற்குமா அல்லது அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா ஏற்பாரா என்று திங்கள்கிழமைக்குள் விளக்கம் அளிக்க வேண்டும் என்று நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.
-
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
Mukesh Ambani: கோடி கோடியாய் லாபம் வந்தாலும்.. ஒரு ரூபா எடுக்கல.. அம்பானி நிலைமையை பாத்தீங்களா! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications