ஜெ. கூட்டத்தில் 2 பேர் பலியான சேலத்தில் தான் அதிகபட்ச வெயில்... 106 டிகிரி சுட்டெரித்தது!
சேலம்: தமிழகத்தில் அதிகபட்சமாக சேலத்தில் நேற்று 106 டிகிரி வெயில் பதிவாகியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழக முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதா நேற்று சேலத்தில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு வேட்பாளர்களை அறிமுகப்படுத்தினார். இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற இரண்டு பேர், வெயிலின் கொடுமையால் மயங்கி விழுந்து உயிரிழந்தனர்.

இந்நிலையில், சேலத்தில் தான் நேற்று அதிகபட்சமான வெயில் பதிவானது தெரிய வந்துள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘சேலத்தில் நேற்று தமிழகத்திலேயே அதிகபட்சமாக 106 டிகிரி வெயில் பதிவாகியுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
மேலும், கொடைக்கானலில் மட்டும் 10 மி.மீ. மழை பதிவாகியுள்ளதாக தெரிவித்துள்ள வானிலை ஆய்வு மையம், ‘தமிழகம், புதுச்சேரியில் தொடர்ந்து ஒரு சில நாள்களுக்கு வறண்ட வானிலையே நிலவும். பகல் வேளைகளில் அனல் காற்று வீசக்கூடும்' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் நேற்று பதிவான வெயில் நிலவரம் (ஃபாரன்ஹீட்டில்):
சேலம் 106
திருப்பத்தூர் 104
திருச்சி 104
தருமபுரி 104
வேலூர் 102
திருத்தணி 102
பாளையங்கோட்டை 102
மதுரை 102
தஞ்சாவூர் 102
கோவை 100
வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வரவே அஞ்சும் சூழல் ஏற்பட்டுள்ளது. தவிர்க்க முடியாத காரணங்களுக்காக வெளியில் செல்பவர்கள் மறக்காமல் கையில் குடை எடுத்துச் செல்ல வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.












Click it and Unblock the Notifications