For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ரெய்டுக்கு பயந்து பெட்டி பெட்டியாய் வெளியேறிய பணம்.. அலர்ட் அதிகாரிகள்!

லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டுகளுக்கு பயந்து பெட்டி பெட்டியாய் பணத்தை அப்புறப்படுத்துகிறார்களாம் ஓய்வு பெற்ற அதிகாரிகள்.

By Raj
Google Oneindia Tamil News

சென்னை: வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக எழுந்த புகார்களின்பேரில், நெடுஞ்சாலைத் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற தலைமை பொறியாளர் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் செவ்வாய்க்கிழமை சோதனை செய்தனர். இதில், பல கோடி ரூபாய் மதிப்புள்ள முக்கிய ஆவணங்கள், ரூ.26.68 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டதாக காவல் துறை வட்டாரங்கள் கூறுகின்றன.

Highway engineers are in fear over raids

நெடுஞ்சாலைத் துறை தலைமை பொறியாளராக இருந்த ஜெயராமன் வீடுகளில் நடந்த ரெய்டுகளால் பல அதிகாாிகள் கலங்கி போயிருக்கிற நிலையில் ராமனாதபுரம் DE மாாிமுத்து ராஜன், கடலுாா் பொறுப்பு, விழுப்புரம் DEயான முரளி ஆகியோர் முக்கிய மானவா்களாம்.

இவா்களது இருப்பிடத்தில் இருந்து பல பல பெரிய... பெரிய... பெட்டிகள் இரவோடு இரவாக வெளியேறியதாக பல்வேறு தகவல்கள் கசிகின்றன. இவா்களிடத்தில் விசாரணை நடத்தினால் இன்னும் சில பொறியாளா்கள் வசமாக சிக்குவார்கள் என்கிறார்கள் நெடுஞ்சாலைத்துறையினர்.

English summary
Highway engineers are in fear over raids, says sources.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X