'சோ' உடலைப் பார்த்து கதறி அழுத ராம கோபாலன்
துக்ளக் பத்திரிகை ஆசிரியர் சோ ராமசாமி மறைவிற்கு ராம கோபாலன் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.
சென்னை: பத்திரிகையாளர் சோ ராமசாமி மறைவிற்கு இந்து முன்னணி நிறுவனத் தலைவர் ராம கோபாலன் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். அப்போது சோவின் உடலைப் பார்த்து கதறி அழுதார்.
துக்ளக் பத்திரிகையின் ஆசிரியர் சோ ராமசாமி இன்று அதிகாலையில் மூச்சுத் திணறல் காரணமாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் மரணமடைந்தார். அவரது உடலுக்கு அரசியல் கட்சித் தலைவர்களும், திரைத்துறையினரும் அஞ்சலி செலுத்தினார்கள்.

இந்து முன்னணியின் மூத்தத் தலைவர் ராம கோபாலன், சோவின் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். அப்போது, "அவரை நான் அடிக்கடி பார்த்து பேசுவேன். பெரிய ஜீனியஸ், மனிதாபிமானி, தேசாபிமாணி. எந்த துறையைப் பற்றி பேசினாலும், தெரிந்து கொண்டுதான் பேசுவார். தெரியாமல் பேசமாட்டார். அவருடை இழப்பு ஈடு செய்ய முடியாது. அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என்று ராம கோபாலன் கூறினார்.
ராம கோபாலன் சோவின் உடலைப் பார்த்து கதறி அழுதார். அவரால் இரங்கல் செய்தியைக் கூட சொல்ல முடியவில்லை. தொடர்ந்து கதறி அழுதவாறே ராம கோபாலன் அங்கிருந்து சென்றார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications