மீனாட்சி அம்மன் கோயிலுக்கு மத்திய படை பாதுகாப்பை இந்து அமைப்புகள் கேட்பது ஏன்??
Recommended Video

மதுரை: இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இருந்து தமிழகம் முழுவதிலுமுள்ள கோயில்களை விடுவிக்க வேண்டும் என்று இந்து அமைப்பினர் கோரிக்கைவிடுத்துள்ளனர்.
பிரபலமான கோயில்களை தமிழக அரசின், இந்து சமய அறநிலையத்துறை தனது கட்டுப்பாட்டில் எடுத்துக்கொள்கிறது. கோயிலுக்கு வரும் காணிக்கை, கடை வாடகை வருமானம் போன்றவற்றை அறநிலையத்துறை எடுத்துக்கொள்கிறது.
கோயிலின் நிர்வாக பணிகளை இந்து அறநிலையத்துறை மேற்கொள்கிறது.

அடிப்படை வசதிகள்
ஆனால், அறநிலையத்துறை செயல்பாடுகள் திருப்திகரமாக இல்லை என்பது இந்து அமைப்புகள், பக்தர்களின் குற்றச்சாட்டு. கோயிலில் போதிய அடிப்படை வசதிகள் செய்து தராதது, முறைகேடுகள் போன்ற குற்றச்சாட்டுகளை அறநிலையத்துறை மீது மக்கள் முன் வைக்கிறார்கள். சமீபத்தில், கோயில்களில் தேர், விமானம் செய்ததில் 100 கிலோ தங்கம் மோசடி செய்யப்பட்டதாக அறநிலையத்துறை மீது ஊடகங்களில் சில குற்றச்சாட்டுகள் எழுந்தன.

மீண்டும் கோரிக்கை
பிற மத வழிபாட்டு தலங்களை அரசு கட்டுப்படுத்தாத போது, இந்து கோயில்களை மட்டும் கட்டுப்படுத்துவதா என்ற கேள்வியை தீவிர இந்து அமைப்புகள் பலகாலமாக குற்றம்சாட்டி வருகின்றன. இந்த நிலையில், மதுரை மீனாட்சி அம்மன் கோயில் வளாகத்தில் நள்ளிரவில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக மீண்டும் இந்த கோரிக்கை வலுப்பெற்றுள்ளது.

மத்திய பாதுகாப்பு படை
இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ள, இந்து முன்னணி அமைப்பை சேர்ந்த ஒருவர் கூறுகையில், கடை வாடகை வருவாய்தான் இந்து அறநிலையத்துறையின் நோக்கம். தீ விபத்திற்கு அறநிலையத்துறைதான் காரணம். அறநிலையத்துறை மதுரை மீனாட்சி அம்மன் கோயிலை விட்டு வெளியேற வேண்டும். மத்திய பாதுகாப்பு படை பாதுகாப்பை வழங்க வேண்டும் என்றார்.

பாதுகாப்பு
இந்து அறநிலையத்துறை மதுரை மீனாட்சி அம்மன் கோயில் நிர்வாகத்தை மட்டும் விட்டுக்கொடுப்பது என்பதற்கு வாய்ப்பில்லை. அதேநேரம், பாதுகாப்பு காரணங்களுக்காக மத்திய பாதுகாப்பு படை பாதுகாப்பு தேவை என அரசு சார்பில் கோரிக்கைவிடுத்து பாதுகாப்பை பலப்படுத்தலாம். ஆனால், பாதுகாப்பு படை, இந்து அறநிலையத்துறைக்கு எதிராக எதையும் செய்ய முடியாது. பாதுகாப்பு, ஆக்கிரமிப்பு அகற்றம் போன்ற பணிகளின்போதுதான், மத்திய பாதுகாப்பு படையை பயன்படுத்த முடியும். இந்து அறநிலையத்துறையை வெளியேற்றிவிட்டு ஹிந்தி பேசும் மத்திய பாதுகாப்பு படையினரை பாதுகாப்பு பணிக்கு அமர்த்தினால் அது பக்தர்களும், வியாபாரிகளுக்கும் தொந்தரவை ஏற்படுத்தும் என்ற வாதமும் முன் வைக்கப்படுகிறது.

சீர் செய்ய வேண்டியது கட்டாயம்
இந்து அறநிலையத்துறையின் மீது குவியும் புகார்களால் இதை சரி செய்து கொண்டு சிறப்பாக செயல்பட வேண்டிய கட்டாயத்தில் அந்த அமைப்பு உள்ளது. அல்லது, மொத்தமாகவே இந்து கோயில்கள் அனைத்திலிருந்தும் அறநிலைய துறையை வெளியேற்றிவிட்டு கோயில் நிர்வாக கமிட்டியின் நிர்வாகத்தில் அவற்றை ஒப்படைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற வாய்ப்புள்ளது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications