பாஜகவின் ஆன்மீக கொள்கையை பின்பற்றுகிறது அதிமுக.. தமிழிசை புகழாரம்
ஜெயலலிதா மரணம் குறித்து எதிர்க்கட்சிகள் எழுப்பும் சந்தேகங்களுக்கு சம்பந்தப்பட்டவர்கள் பதில் கூறுவது கடமையாகும். அதே நேரம் மருத்துவ சிகிச்சை குறித்து பல்வேறு சந்தேகங்களை எழுப்புவது சரியல்ல என்பதையும் க
மதுரை: பாஜகவின் ஆன்மீக கொள்கையை அடியொற்றி அதிமுக செயல்படுகிறது என்று பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.
பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் இன்று மதுரையில் நிருபர்களிடம் கூறியதாவது: சென்னையில் வர்தா புயல் பாதிப்பை தமிழக அரசு எதிர்கொண்ட விதம் பாராட்டுக்குரியது.

புயல் காரணமாக சென்னை மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் சுமார் ஒரு லட்சம் மரங்கள் வேரோடு சாய்ந்து விட்டன. இதற்கு மாற்றாக பாஜக சார்பில் 2 லட்சம் மரக்கன்றுகளை நட திட்டமிட்டுள்ளோம்.
ஜல்லிக்கட்டு நடத்துவதில் மத்திய அரசு உறுதியாக உள்ளது. இதுதொடர்பான வழக்கில் சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு சார்பில் அழுத்தமான வாதத்தை முன்வைத்துள்ளது. ஆகவே கோர்ட்டில் சாதகமான தீர்ப்பு வரும் என எதிர்பார்க்கலாம்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து எதிர்க்கட்சிகள் எழுப்பும் சந்தேகங்களுக்கு சம்பந்தப்பட்டவர்கள் பதில் கூறுவது கடமையாகும். அதே நேரம் மருத்துவ சிகிச்சை குறித்து பல்வேறு சந்தேகங்களை எழுப்புவது சரியல்ல என்பதையும் கவனிக்க வேண்டும்.
தமிழக முதல்வராக பொறுப்பேற்றுள்ள ஓ.பன்னீர் செல்வத்தின் நடவடிக்கைகள் சிறப்பாக இருக்கிறது. பாஜகவின் ஆன்மீக கொள்கையை அடியொற்றி அதிமுக செயல்படுகிறது. இருப்பினும், கொள்கை அடிப்படையில் அக்கட்சியோடு கூட்டணி வைப்பது குறித்து இப்போது கூற முடியாது. இவ்வாறு தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.
-
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்? -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
நாளை திருச்சி வரும் விஜய்.. நேரில் சந்திக்கிறாரா விஜயபாஸ்கர்? அதிமுகவில் விழப்போகும் அடுத்த விக்கெட்












Click it and Unblock the Notifications