கலைஞர் கோட்டத்தில் கருணாநிதியின் வரலாற்று புகைப்படங்கள்.. வியப்புடன் பார்த்த தேஜஸ்வி யாதவ்
திருவாரூர்: திருவாரூர் அருகே காட்டூரில் தயாளு அம்மாள் அறக்கட்டளை சார்பில் ரூ.12 கோடியில் 7,000 சதுர அடி பரப்பளவில் கலைஞர் கோட்டம் கட்டப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நிகழ்ச்சியில் பங்கேற்ற பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ், கலைஞரின் வரலாற்று ஆவணங்களையும் புகைப்படங்களையும் வியப்புடன் பார்த்தார்.
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி நூற்றாண்டு விழா அரசு சார்பில் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி அவரது நினைவாக திருவாரூரை அடுத்த காட்டூரில் சென்னை தயாளு அம்மாள் அறக்கட்டளை சார்பில் கலைஞர் கோட்டம் கட்டப்பட்டு இருக்கிறது. 7 ஆயிரம் சதுரஅடி பரப்பளவில் ரூ.12 கோடி செலவில் கலைஞர் கோட்டம் கட்டப்பட்டுள்ளது.

இந்த கலைஞர் கோட்டத்தில் கருணாநிதி சிலை, முத்துவேலர் நூலகம், கருணாநிதியின் நினைவுகளை போற்றக்கூடிய பழைய புகைப்படங்கள் உள்ளிட்டவை இடம் பெற்றுள்ளது. மேலும் 2 திருமண மண்டபங்களும் கட்டப்பட்டுள்ளன. இந்த கலைஞர் கோட்டத்தை முதல்வர் மு.க ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். பீகார் முதல்வர் நிதிஷ்குமாரின் வருகை ரத்தானது. எனினும் திட்டமிட்டபடி பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் வருகை தந்தார்.
பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் திறந்து வைத்தார். பின்னர் கருணாநிதி உருவச்சிலையை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார். பின்னர் கலைஞர் கோட்டத்தில் இடம் பெற்றிருந்த கருணாநிதியின் வரலாற்று சிறப்பு மிக்க புகைப்படங்களை முதல்வர் மு.க ஸ்டாலின், தேஜஸ்வி யாதவ் உள்ளிட்டோர் பார்த்தனர். ஒவ்வொரு புகைப்படத்தையும் நுணுக்கமாக தேஜஸ்வி யாதவ் கவனித்தார். தேஜஸ்வி யாதவிற்கு டிஆர் பாலு மற்றும் திருச்சி சிவா ஆகியோரும் அவ்வப்போது கலைஞர் கோட்டத்தில் இடம்பெற்றுள்ள சிறப்புகளை எடுத்து விளக்கி கூறினர்.












Click it and Unblock the Notifications