மது விருந்து... கோவை ஸ்டார் ஹோட்டலுகு பூட்டுப் போட முயற்சி... 6 பேர் கைது
கோவை: ஆங்கிலப் புத்தாண்டுக் கொண்டாட்டம், நடனம், பார்ட்டி, மது விருந்து ஆகியவற்றைக் கண்டித்து கோவையில் நட்சத்திர ஹோட்டல் ஒன்றுக்குப் பூட்டுப் போட்டு மூடும் போராட்டம் நடத்தப்பட்டது. இதையடுத்து அதில் ஈடுபட்ட 6 பேரை போலீஸார் கைது செய்தனர்.
2014 ஆங்கிலப் புத்தாண்டு பிறந்துள்ளது. இதையொட்டி டிசம்பர் 31ம் தேதி இரவு முழுவதும் ஹோட்டல்கள், ரிசார்ட்கள் உள்ளிட்ட இடங்களில் ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம், மது விருந்து அமர்க்களப்பட்டது.
ஆண்டுதோறும் இந்த விருந்து கொண்டாட்டங்கள் உச்சஸ்தாயியை எட்டி வருகின்றன. இந்த நிலையில், இத்தகைய கொண்டாட்டங்கள் தை 1-ஆம் தேதியான தமிழர் தினம், சித்திரை திருநாளான தமிழ் புத்தாண்டு ஆகியவற்றை அவமதிக்கும் செயலாகும் என்று கூறி, புத்தாண்டு கொண்டாட்டங்களை கண்டித்து இந்து மக்கள் கட்சியின் மாவட்ட இளைஞரணி பொதுச் செயலாளர் காலனி பிரபு தலைமையில் நூதனப் போராட்டம் நடத்தப்பட்டது.
பிரபு தலைமையில் 6 பேர் கோவை அவிநாசி சாலையில் உள்ள தனியார் நட்சத்திர ஹோட்டலுக்கு பூட்டு போட முயன்றனர். அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸார் அவர்களை கைது செய்தனர்.
-
கோவை சிறுமி விவகாரம்! வாழறதுக்கே தகுதி இல்லாதவர்கள்! எம்.எஸ்.பாஸ்கர் கொந்தளிப்பு -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்?












Click it and Unblock the Notifications