சென்னை ”ஸ்கைவாக்”கில் வெடிகுண்டு மிரட்டலால் பீதி- பொதுமக்கள் வெளியேற்றம்!
சென்னை: சென்னை அமைந்தகரையில் அமைந்துள்ள வணிக வளாகமான "ஸ்கைவாக்"கில் வெடிகுண்டு இருப்பதாக வந்த தொலைபேசி அழைப்பினால் மக்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்ட சம்பவம் பீதியை ஏற்படுத்தியது.
அமைந்தகரை பூந்தமல்லி நெடுஞ்சாலையில் ஸ்கைவாக் வணிக வளாகம் உள்ளது. 6 மாடிகள் கொண்ட இந்த கட்டிடத்தில் 7 சினிமா தியேட்டர்கள் உள்ளன. உணவகங்கள், வணிக நிறுவனங்கள், நகைக்கடைகள், துணிக்கடைகள், பொழுது போக்கு மையங்கள் உள்ளன. தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் இங்கு வந்து செல்கிறார்கள்.

இந்நிலையில், இன்று முற்பகல் 11.40 மணி அளவில் சென்னை போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு மர்மபோன் ஒன்று வந்தது. அதில் பேசியவர், ‘‘ஸ்கைவாக் வணிக வளாகத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளது. அது எந்த நேரத்திலும் வெடிக்கும்'' என்று தெரிவித்துவிட்டு போனை வைத்து விட்டார்.
இதுகுறித்து உடனடியாக அமைந்தகரை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக போலீசார் மோப்பநாய் மற்றும் வெடிகுண்டு நிபுணர்களுடன் அங்கு சென்றனர். ஒவ்வொரு மாடியாக சோதனை நடைபெற்றது. அங்கு இருந்த பொதுமக்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டனர்.
அங்கு வந்தவர்கள் என்ன செய்வது என்று தெரியாமல் வெளியே நின்றனர். தகவல் அறிந்ததும் ஏராளமானோர் ஸ்கைவாக் கட்டிடம் முன்பு கூடி நின்றனர். இதுவரையில் சோதனை தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications