மதுரை சித்திரை திருவிழாவில் குண்டு வெடிக்கும்: மிரட்டல் விடுத்தவர் கைது
மதுரை: மதுரை சித்திரை திருவிழாவில் ஒருவர் வெடிகுண்டு வைத்து நாச வேலையில் ஈடுபடப் போவதாக போன் மூலம் மிரட்டல் விடுத்தவரை போலீசார் கைது செய்தனர்.
மதுரை மேல்அனுப்பானடியைச் சேர்ந்தவர் ஜான்சன்(24). அவருக்கும் அதே பகுதியில் செருப்பு தைக்கும் தொழிலாளியான சதீஷ் என்பவருக்கும் இடையே பகையாக இருந்துள்ளது. இதனால் சதீஷை பழிவாங்க நினைத்த ஜான்சன் அவரை போலீசில் சிக்க வைக்க திட்டமிட்டார். அண்மை காலமாக மதுரையில் அடிக்கடி பொய் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்படும் நிலையில் அதன் மூலமே சதீஷை மாட்டிவிட முடிவு செய்தார்.
இதையடுத்து அவர் போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்து மதுரை சித்திரை திருவிழாவில் குண்டு வைக்கப் போவதாக சதீஷ் பேசிக் கொண்டிருந்ததாக கூறிவிட்டு இணைப்பை துண்டித்துவிட்டார். உடனே போலீசார் சதீஷை கண்டுபிடித்து விசாரித்தபோது அது பொய் என்று தெரிய வந்தது.
விசாரணையில் ஜான்சனுக்கும், சதீஷுக்கும் இடையே உள்ள பகை குறித்து போலீசார் தெரிந்து கொண்டனர். இதையடுத்து அவர்கள் ஜான்சனை கைது செய்தனர்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications