மதிமுக கூட்டத்தில் வெறுப்பேற்றிய துரை வைகோ ஆதரவாளர்கள்- விரக்தியடைந்த வைகோ ஆதரவாளர் மல்லை சத்யா!

Subscribe to Oneindia Tamil

சென்னை: மதிமுகவின் துணைப் பொதுச் செயலாளர் பதவியில் இருந்து தாம் ராஜினாமா செய்ய தயாராக இருப்பதாகவும் மதிமுகவின் நிர்வாகிகள் மூலம் வாக்கெடுப்பு நடத்தி தம்மை கட்சியில் இருந்து நீக்கிவிடுங்கள் என்றும் அக்கட்சியின் நிர்வாகக் குழு கூட்டத்தில் மல்லை சத்யா பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மதிமுகவின் நிர்வாகக் குழு கூட்டம் அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ தலைமையில் சென்னையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு வைகோ மற்றும் துரை வைகோ வருகை தந்த போது அவர்களுக்கு ஆதரவாக உரத்த முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இதனால் கடுப்பாகிப் போன வைகோ, கை நீட்டி நிர்வாகிகளை எச்சரித்தார்.

mdmkmallaisathya

பின்னர் மதிமுக நிர்வாக குழு கூட்டம் தொடங்கியது. இந்தக் கூட்டத்துக்கு துணைப் பொதுச்செயலாளர் மல்லை சத்யா வருகை தந்தார். மரியாதைக்கு கூட ஒருவர் கூட எழுந்து நின்று மல்லை சத்யாவுக்கு வணக்கம் தெரிவிக்கவில்லை. அத்துடன் மல்லை சத்யாவை வெறுப்பேற்றும் வகையில் துரை வைகோ ஆதரவு நிர்வாகிகள் சில முழக்கங்களை எழுப்பியதாகவும் விமர்சனங்களை முன்வைத்ததாகவும் கூறப்படுகிறது.

இந்தக் கூட்டத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவியை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட 9 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மேலும் இன்றைய கூட்டத்தில் மதிமுக துணைப் பொதுச்செயலாளர் மல்லை சத்யா மற்றும் மதிமுக முதன்மை செயலாள பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்த துரை வைகோ இடையேயான மோதல் குறித்தும் விவாதிக்கப்பட்டது.

இன்றைய நிர்வாகக் குழு கூட்டத்தில் பேசிய மதிமுக மாவட்டச் செயலாளர்கள் 40-க்கும் மேற்பட்டோர், துரை வைகோவுக்கு ஆதரவாக பேசினர். இந்தக் கூட்டத்தில் பேசிய மல்லை சத்யா, தாம் துணைப் பொதுச்செயலாளர் பதவியில் இருந்து ராஜினாமா செய்ய தயாராக இருக்கிறேன். அத்துடன் மதிமுக நிர்வாகக் குழுவிலேயே ஒரு வாக்கெடுப்பும் நடத்தி என்னை மதிமுகவில் இருந்தே நீக்கிவிடுங்கள் எனவும் உருக்கமாக வேண்டுகோள் விடுத்தார். துரை வைகோ ஆதரவாளர்களின் நடவடிக்கையால் உச்சகட்ட வெறுப்படைந்ததாலேயே மல்லை சத்யா இப்படி விரக்தியாக பேசினார் என்கின்றன அக்கட்சி வட்டாரங்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+