பிய்த்து எடுக்கும் பருவ மழை.. விடுமுறையால் பள்ளிக் குழந்தைகள் ஜாலி!
கனமழை காரணமாக பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
Recommended Video

கோவை: கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று இரவு முதல் கன மழை பெய்து வருவதால், பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை விடப்படுவதாக மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் தெரிவித்துள்ளார். அதேபோல, நீலகிரி மாவட்டத்திலும் உதகை, கூடலூர், பந்தலூர், குன்னூர் தாலுகாவில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளன. இதனால் இரு மாவட்ட பள்ளிக்குழந்தைகள் குஷியடைந்துள்ளனர்.
தென்மேற்கு பருவமழை காரணமாக நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களில் கடந்த இரண்டு நாட்களாக கனமழை பெய்து வருகிறது.
இதனால் கோவை, நீலகிரி, தேனி மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருவதால் அந்தந்த மாவட்டங்களின் அணைகளின் நீர் மட்டம் தொடர்ந்து அதிகரித்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

பில்லூர் நிரம்பியது
குறிப்பாக கனமழையினால் கோவை மாவட்டம், பில்லூர் அணைக்கு வரும் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் பவானி ஆற்றில் வெள்ளம் ஏற்பட வாய்ப்பு ஏற்படலாம் என கருதி, கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு ஆட்சியர் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இரவு முழுவதும் மழை
நேற்று இரவுமுழுவதும் மழை வெளுத்து கட்டியதால் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்துள்ளன. சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

மக்கள் இயல்பு நிலை
மக்களின் இயல்பு வாழ்க்கையும் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளிப்பதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

ஊட்டி, குன்னூர்
இதேபோல் நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையால் உதகை, கூடலூர், பந்தலூர், குன்னூர் தாலுகாவில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது
-
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!












Click it and Unblock the Notifications