சாம்பாரில் கிடந்த “மனிதப்பல்” - ஹோட்டல் ஊழியருக்குக் கத்திக் குத்து!
சிவகங்கை: சிவகங்கை மாவட்ட ஹோட்டல் ஒன்றின் சாம்பாரில் மனிதப்பல் கிடந்ததால் ஹோட்டல் ஊழியருக்கு கத்திக்குத்து விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
சிவகங்கை மாவட்டம், காளையார் கோயில் அருகிலுள்ள இரும்பூரைச் சேர்ந்தவர் முனியாண்டி மகன் பாலகிருஷ்ணன். இவர், திருப்பூர் பிச்சம்பாளையம் புதூர் பகுதியில் தங்கி அருகில் உள்ள உணவகம் ஒன்றில் வேலை செய்து வருகிறார்.

இதேபோல், சிவகங்கை மாவட்டம், வேம்பத்தூர், மூலக்குளத்தை சேர்ந்தவர் முத்துப்பாண்டி. இவர் பிச்சம்பாளையம் புதூர் பகுதியில் உள்ள தனியார் சரக்கு போக்குவரத்து நிறுவனத்தில் ஓட்டுநராகப் பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில் பாலகிருஷ்ணன் வேலை செய்யும் உணவகத்துக்கு முத்துப்பாண்டி செவ்வாய்க்கிழமை இரவு சாப்பிடுவதற்காக சென்றுள்ளார். அங்கு அவர் உணவருந்தி கொண்டிருந்த போது பாலகிருஷ்ணன் ஊற்றிய சாம்பாரில் மனித பல் கிடந்துள்ளது.
இதைப் பார்த்த முததுப்பாண்டி பல் கிடந்தது குறித்து தனக்கு உணவு பரிமாறிய பாலகிருஷ்ணனிடம் கேட்டுள்ளார். இதுதொடர்பாக அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த முத்துப்பாண்டி அங்கிருந்த கத்தியை எடுத்து பாலகிருஷ்ணனின் வயிற்றிலும், தொடையிலும் குத்தி விட்டு அங்கிருந்து தப்பிச்சென்றார்.
இதில் பலத்த காயமடைந்த பாலகிருஷ்ணனை அங்கிருந்தவர்கள் மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இதுதொடர்பாக முத்துப்பாண்டியை அனுப்பர் பாளையம் போலீஸார் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications