Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

குன்னூர் பேருந்து விபத்து.. பலி எண்ணிக்கை 9ஆக உயர்வு.. பலரின் உயிரை காத்த ஒற்றை மரம்.. என்ன நடந்தது?

Subscribe to Oneindia Tamil

குன்னூர்: குன்னூர் பேருந்து விபத்தில் பலி எண்ணிக்கை 9ஆக உயர்ந்துள்ளது. இந்த பலி எண்ணிக்கை மக்கள் இடையே அதிர்ச்சி அடைந்துள்ளது.

ஏற்கனவே 8 பேர் உயிரிழந்த நிலையில் மேலும் ஒருவரின் உடல் மீட்கப்பட்டு உள்ளது. அங்கே நேற்றில் இருந்து தீவிர மீட்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அங்கே விபத்தில் சிக்கி காணாமல் போனவர் உடல் இன்று அதிகாலை சடலமாக மீட்கப்பட்டது.

How did a tree save so many people in Coonoor bus accident? What really happened?

கூடுதலாக உடல் மீட்கப்பட்டதை அடுத்து உயிரிழப்பு எண்ணிக்கை 9ஆக அதிகரித்துள்ளது. அங்கே தொடர்ந்து மீட்பு பணிகள் நடந்து வருகின்றன. இந்த விபத்தில் 50க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். குன்னூர் மரப்பாலம் அருகே இந்த பேருந்து கவிழ்ந்து உள்ளது.

பேருந்தின் ஸ்டியரிங் லாக் ஆன் நிலையில், வந்த வேகத்தில் வண்டியை திருப்ப முடியாமல் வளைந்து பள்ளத்தில் கவிழ்ந்து உள்ளது. மரப்பாலம் அருகே இந்த சம்பவம் நடந்து உள்ளது. 50 அடி பள்ளத்தில் இந்த பேருந்து விழுந்துள்ளது. வலது பக்கமாக அப்படியே இழுத்துக்கொண்டே சென்று இந்த பேருந்து விழுந்துள்ளது.

தென்காசியை சேர்ந்த 61 பேர் இந்த பயணத்தை மேற்கொண்டு உள்ளனர். கேரளா, ஊட்டி பகுதிகளுக்கு சென்றுள்ளனர். இவர்களின் பயணத்தில்தான் விபத்து ஏற்பட்டு உள்ளது. இதுவரை 63 பேரில் 9 பேர் பலியாகி உள்ளனர். 50 பேர் காயம் அடைந்துள்ளனர். மீட்கப்பட்ட 50 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

இங்கே 50 அடி ஆழத்தில் ஒரு மரம் இருந்துள்ளது. இதில்தான் பேருந்து சிக்கி உள்ளது. இந்த ஒற்றை மரம் இல்லை என்றால் பேருந்து 150 அடிக்கு சென்று இருக்கும். பேருந்து 150க்கு கீழ் விழுந்து இருந்தால் மீட்பு பணிகள் கடினமாகி இருக்கும். பலர் பலியாகி இருப்பார்கள்.

அதை இந்த ஒற்றை மரம்தான் தடுத்துள்ளது.

How did a tree save so many people in Coonoor bus accident? What really happened?

தமிழ்நாடு அரசு இரங்கல்: இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்ட இரங்கலில்

நீலகிரி மாவட்டம் சுற்றுலாப் பேருந்து பள்ளத்தில் விழுந்து ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவர்களின் தென்காசி மாவட்டத்திலிருந்து உதகமண்டலத்திற்கு தனியார் பேருந்து மூலம் சுற்றுலாவிற்கு சென்றவர்கள் இன்று (30-9-2023) தென்காசிக்கு திரும்பும் வழியில், சுற்றுலாப் பேருந்து நீலகிரி மாவட்டம், குன்னூர், பர்லியாறு அருகே வந்துகொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக பள்ளத்தில் விழுந்த ஏற்பட்ட விபத்தில் பேருந்தில் பயணம் செய்த திருமதி.முப்புடாதி (வயது 67), திரு.முருகேசன் (வயது 65), திரு. இளங்கோ (வயது 64), திருமதி.தேவிகலா (வயது 42), திருமதி.கௌசல்யா (வயது 29) மற்றும் செல்வன். நிதின் (வயது 15) ஆகியோர் உள்ளிட்ட எட்டு பேர் உயிரிழந்தனர் என்ற துயரமான செய்தியினைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன்.

குன்னூர் பஸ் விபத்து: பலி எண்ணிக்கை 8 ஆக உயர்வு.. ஊட்டி சென்றுவிட்டு தென்காசி திரும்பிய போது சோகம்
மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் திரு.கா.ராமச்சந்திரன் அவர்களை விபத்து நடந்த இடத்தில் நடைபெற்றுவரும் மீட்பு மற்றும் நிவாரணப்பணிகளை மேற்பார்வையிட்டு துரிதப்படுத்தவும், மேலும் இவ்விபத்தில் படுகாயம் மற்றும் லேசான காயமடைந்து மருத்துவமனையில் அறிவுறுத்தியுள்ளேன். அனுமதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு சிறப்பு சிகிச்சை வழங்கவும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆறுதலையும், ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக்கொள்வதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா இரண்டு இலட்சம் ரூபாயும், படுகாயமடைந்து சிகிச்சை பெற்றுவருபவர்களுக்கு தலா ஒரு இலட்சம் ரூபாயும், லேசான காயமடைந்து சிகிச்சை பெற்றுவருபவர்களுக்கு தலா ஐம்பதாயிரம் ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிட உத்தரவிட்டுள்ளேன், என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+