"அதை" வேற தலையில் மாட்டிக்கிட்டு.. வெறும் பிளேடுதான்.. பெண்ணை நடுரோட்டில் வழிமறித்து.. யார்னு பாருங்க

நடத்தை மீது சந்தேகம் அதிகமானதால், மனைவியின் முகத்தை பிளேடால் கிழித்துவிட்டார் கணவர்

Subscribe to Oneindia Tamil

செங்கல்பட்டு: சந்தேகப்பேய் தீராமல் ஆட்டுவித்ததால், தன்னுடைய குடும்பத்தையே நடுத்தெருவுக்கு கொண்டு வந்துவிட்டார் பட்டம் படித்த நபர் ஒருவர்.. போலீசார் தொடர்ந்து இவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.. செங்கல்பட்டு மாவட்டத்தில் என்ன நடந்தது?

செங்கல்பட்டு மாவட்டம் வெண்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் குமாரசாமி.. 56 வயதாகிறது.. இவர் சென்னை நந்தனம் கலைக் கல்லூரியில் வரலாற்று பேராசிரியராக பணியாற்றி வருகிறார்.

ஆரம்ப காலத்தில் டியூஷன் எடுத்து வந்துள்ளார்.. அப்போது இவரிடம் ஜெயவாணி என்ற மாணவி டியூஷன் படிக்க வந்துள்ளார்.. இந்த மாணவியை ஆசிரியர் காதலித்துள்ளார்..

 நர்ஸ்

நர்ஸ்

தன் காதலை அந்த பெண்ணிடம் சொல்லவும், அந்த பெண்ணும் காதலை ஏற்றுள்ளார்.. இறுதியில் 2 பேருமே திருமணம் செய்து கொண்டனர்.. மனைவி இப்போது ஒரு அரசு மருத்துவமனையில் டிரெயினிங் நர்ஸாக வேலை பார்த்து வருகிறார்.. இவர்களுக்கு 2 மகள்களும், ஒரு மகனும் இருக்கிறார்கள்.. இந்த தம்பதி இருவருக்கும் 20 வயது வித்தியாசம் இருக்கிறது.. ஆனாலும், காதலித்து மணம் புரிந்ததால், திருமண வாழ்க்கை நன்றாகவே சென்றது.. 2 குழந்தைகள் பிறந்த பிறகு, மனைவியின் நடத்தையில் குமாரசாமிக்கு சந்தேகம் ஏற்பட துவங்கியது.. இது நாளடைவில் இருவருக்குள்ளும் தகராறாக வெடித்து வந்துள்ளது.. எனினும் 2 குழந்தைகளுக்காக, ஜெயவாணி அனைத்தையும் பொறுத்து கொண்டு வந்துள்ளார்..

 பிளேடு

பிளேடு

இந்நிலையில், சம்பவத்தன்று ஜெயவாணி வழக்கம்போல வேலைக்காக சாலையில் நடந்து சென்றுக்கொண்டிருந்தார்.. அப்போது, ஒரு பிச்சைக்காரர் ஜெயவாணியை திடீரென வழிமறித்தார்.. இதனால் அதிர்ந்து போன ஜெயவாணி, அங்கிருந்து நகர முயன்றார்.. ஆனால், அந்த பிச்சைக்காரர், கெட்ட கெட்ட வார்த்தைகளால் ஜெயவாணியை திட்டியதுடன், கையில் வைத்திருந்த பிளேடால் ஜெயவாணி முகத்தில் சரமாரியாக கிழித்துவிட்டு, அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்... இதனால் ஜெயவாணிக்கு முகமெல்லாம் ரத்தம் கொட்டியது.. வலியால் கதறினார்.. உடனே அங்கிருந்தவர்கள் ஜெயவாணியை மீட்டு, அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்... போலீசுக்கும் தகவல் பறந்தது..

 கிழிந்த முகம்

கிழிந்த முகம்

இந்த சம்பவம் தொடர்பாக எழும்பூர் போலீசார் விசாரணையை துவங்கினர்.. சம்பவம் நடந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளையும் ஆராய்ந்தனர்.. அந்த சிசிடிவியில் பார்த்தால், பிச்சைக்காரர் வேடத்தில் வந்தது, கணவன் குமாரசாமி இருப்பதை பார்த்து அதிர்ந்து போனார்கள்.. இதையடுத்து, குமாரசாமியிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது, ஜெயவாணி மீது சந்தேகம் தீரவேயில்லை.. அதனால்தான் அவள் முகத்தை கிழிக்க முடிவு செய்தேன் என்று வாக்குமூலம் தந்துள்ளார்.. இப்போது வரலாற்று பேராசிரியர் கைது செய்யப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார்.

 மாறுவேஷம்

மாறுவேஷம்

சிந்தாதரிப்பேட்டையில் வசித்து வந்த ஜெயவாணியின் தந்தை கடந்த 11ம்தேதி உடல்நலக்குறைவால் இறந்துவிட்டார்.. அதனால், அவரது இறுதி சடங்கில் பங்கேற்க ஜெயவாணி தன்னுடைய குடும்பத்துடன் சென்றிருக்கிறார்.. எனவே, அவருடைய சிந்தாதரிப்பேட்டையில் உள்ள அவரது அக்கா வீட்டில் தற்சமயம் தங்கியிருந்து வேலைக்கு சென்று வந்துள்ளார்.. அப்படித்தான், சம்பவத்தன்று, எழும்பூர் ஆங்கிலோ இந்தியன் சாலையில் நடந்துசென்றபோது, ஜெயவாணியின் முகம் பிளேடால் கிழிக்கப்பட்டது.. அப்போதுகூட, பிளேடால் கிழித்தது, தன்னுடைய கணவர் என்று ஜெயவாணிக்கு தெரியாதாம்.. மர்மநபர் தன்னை தாக்கிவிட்டதாக போலீசில் புகார் தந்துள்ளார்..

 மாறுவேட கணவர்

மாறுவேட கணவர்

போலீசார்தான், அந்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஜெயவாணியிடம் காண்பித்துள்ளனர்.. அந்த வீடியோவில் உள்ள நபரின் நடை, உடை, பாவனையை வைத்து, அந்த மர்மநபர், தன்னுடைய கணவர் போலவே இருப்பதாக ஜெயவாணி சொல்லவும், பேராசிரியரிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தப்பட்டுள்ளது. 20 வயது வித்தியாசம் என்பதால், இவர்களின் திருமணத்துக்கு ஜெயவாணியின் வீட்டில் எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது.. அதனால், குடும்பத்தை எல்லாம் எதிர்த்துதான், கடந்த 2011-ல் குமாரசாமியை திருமணம் செய்துள்ளார் ஜெயவாணி.. மனைவியை குமாரசாமியே எம்எஸ்சி நர்சிங்கும் படிக்க வைத்துள்ளார்..

 தலையில் விக்

தலையில் விக்

குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் டிரெயினிங் நர்சாகவும் வேலை கிடைத்துள்ளது.. இந்த நர்ஸ் வேலைக்கு போனதில் இருந்தே யாருடனோ ஜெயவாணி போனில் பேசிக் கொண்டே இருப்பதாக குமாரசாமிக்கு சந்தேகம் இருந்து வந்துள்ளது.. சமீபகாலமாகவே, செங்கல்பட்டில் இருந்து, சிந்தாதரிப்பேட்டைக்கு வந்து அக்கா வீட்டில் தங்கியிருப்பதால், மேலும் சந்தேகம் அதிகமாகி உள்ளது. சந்தேகம் காரணமாகவே, அடிக்கடி தகராறு செய்து மனைவியை சித்ரவதை செய்து வந்துள்ளாராம் குமாரசாமி..

 ஸ்கூல் லவ்

ஸ்கூல் லவ்

ஒருமுறை சண்டையில், ஸ்கூல் படிக்கும்போது ஏற்கனவே ஒருத்தரை விரும்பியதாகவும், இப்படி தொடர்ந்து சந்தேகப்பட்டு தகராறு செய்து கொண்டிருந்தால், அந்த காதலனையே தேடிப்போய் திருமணம் செய்து கொள்வேன் என்றும் ஜெயராணி சொன்னாராம்.. கோபத்திலும் ஆத்திரத்திலும் அவர் இப்படி சொன்னாலும், ஒருவேளை தன் மனைவி, தன்னைவிட்டு பிரிந்து சென்றுவிடுவாளோ என்ற பயம் குமாரசாமிக்கு வந்துள்ளதாக சொல்கிறார்கள்.. அதனால்தான் சம்பவத்தன்று, தலையில் "விக்" மாட்டிக் கொண்டு, மாறுவேடத்தில் வந்து பிளேடால் ஜெயவாணியின் முகத்தை கிழித்துவிட்டு ஓடியது தெரியவந்துள்ளது..!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+