புள்ளியை இணைச்சு பாருங்க! சாராய சாவுக்கு போனவங்களிடம் கள்ளச்சாராயம்! கள்ளக்குறிச்சியில் நடந்தது என்ன
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணம் தொடர்பாக மிக முக்கியமான, அதிர்ச்சி அளிக்க கூடிய தகவல்கள் வெளியாகி உள்ளன.
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரம் தமிழ்நாட்டையே உலுக்கி உள்ளது. இதில் பலியானோர் எண்ணிக்கை 33 ஆக உயர்ந்து உள்ளது. இதில் ஏற்கனவே சாராயம் காய்ச்சிய 3 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

கள்ளக்குறிச்சி வட்டத்தில், கருணாபுரம் காலனியைச் சேர்ந்த 50 நபர்கள் வாந்தி, வயிற்றுவலி, வயிற்றெரிச்சல் போன்ற உபாதைகள் இருப்பதாகத் தெரிவித்து கள்ளக்குறிச்சி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார். காவல் துறை மற்றும் வருவாய்த் துறையினர் மேற்கொண்ட விசாரணையில், மேற்படி நபர்கள் பாக்கெட் சாராயத்தை அருந்தியிருக்கக்கூடும் என்று சந்தேகிக்கப்படுகிறது.
எப்படி நடந்தது?: கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணம் தொடர்பாக மிக முக்கியமான, அதிர்ச்சி அளிக்க கூடிய தகவல்கள் வெளியாகி உள்ளன.
பிரவீன்குமார், வயது 26, த/பெ. கணேசன் முதலில் அதிகாலை 3 மணியளவில் வயிற்று வலியின் காரணமாக கள்ளக்குறிச்சி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி பலியானார்.
இவர் பலியான நிலையில்... அதன்படி விஷச்சாராயம் குடித்து இறந்தவரின் இறுதிச்சடங்கிற்கு சென்றவர்களும் விஷ சாராயத்தை வந்து வாகனத்தில் விநியோகம் செய்துள்ளனர். அவர்களும் விஷ சாராயம் குடித்துள்ளனர். முதலில் உயிரிழந்தவருக்கு ஏற்பட்ட பாதிப்புகளை எல்லாம் தெரிந்தும் கூட.. நமக்கு எல்லாம் எதுவும் ஆகாது என்று நினைத்து இவர்கள் விஷ சாராயத்தை குடித்து உள்ளனர்.
பைக்கில் வந்த சிலர் கள்ளச்சாராயத்தை கொடுத்து.. துக்கத்தை போக்க இதை குடிங்க என்பது போல பேசி உள்ளனர். சிலர் அது கள்ளச்சாராயம் என்று தெரிந்து குதித்துள்ளனர். சிலர் அது கள்ளச்சாராயம் என்று தெரியாமல் குதித்துள்ளனர். சாராயம் விற்ற சிலருக்கு ஒரு தேசிய கட்சியின் ஆதரவு இருப்பதாக கூறப்படுகிறது.
சுரேஷ் என்பவரின் மரணம்தான் தொடக்க புள்ளி. அங்கே வந்த 50 பேருக்கு கள்ளச்சாராயம் கொடுக்கப்பட்டு உள்ளது. அவர்கள்தான் மருத்துவமனையில் உள்ளனர். ஒரு புள்ளியில் இருந்து இணைக்கப்பட்டு அங்கே வந்த எல்லோருக்கும் உடல் பாதிக்கப்பட்டு உள்ளது. அதில் தான் 33 பேர் பலியாகி உள்ளனர்.
ஸ்டாலின் அறிக்கை: இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில், அவர்களில் பிரவீன்குமார், வயது 26, த/பெ. கணேசன் அதிகாலை 3 மணியளவில் வயிற்று வலியின் காரணமாக கள்ளக்குறிச்சி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
மேலும், திரு சுரேஷ், வயது 40 த/பெ. தர்மன் மற்றும் திரு சேகர், வயது 59, த/பெ கந்தன் ஆகியோரும் சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டதாகவும் அவர்களின் உடல்கள், உடல் கூராய்விற்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இறப்பின் காரணம், உடல் கூராய்விற்குப் பின்பு தெரியவரும். மேற்கண்ட 26 நபர்களில், வடிவு, த/பெ சுரேஷ், மற்றும் கந்தன் த/பெ சின்னு ஆகிய இருவரும் சிகிச்சை பலனின்றி இறந்துவிட்ட நிலையில் மற்ற அனைவருக்கும் கள்ளக்குறிச்சி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
விழுப்புரம் மருத்துவக் கல்லூரியிலிருந்து நான்கு சிறப்பு மருத்துவர்களைக் கொண்ட மருத்துவர் குழு கள்ளக்குறிச்சி மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளனர். இந்த மருத்துவக் குழு, பாதிக்கப்பட்ட நபர்களுக்குச் சிகிச்சை அளித்து வருகிறது.
அதோடு மட்டுமல்லாமல், சேலம் மற்றும் திருவண்ணாமலை ஆகிய இரண்டு மாவட்டங்களிலிருந்தும், சிறப்பு மருத்துவர் குழு கள்ளக்குறிச்சிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். மேலும், 18 நபர்கள் அவசரகால ஊர்தியின் மூலமாக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு உயர்சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். 6 நபர்களுக்கு அவசர சிகிச்சை அளிப்பதற்காக, சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
12 அவசர கால ஊர்திகள் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தயாராக வைக்கப்பட்டுள்ளது. மேல்சிகிச்சைக்குத் தேவையான அனைத்து மருந்துகளும், விழுப்புரம், சேலம், திருவண்ணாமலை மருத்துவமனைகளிலிருந்து மருத்துவக் கள்ளக்குறிச்சிக்கு கல்லூரி அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இப்பணிகளை மேற்பார்வையிட, தமிழ்நாடு சுகாதாரத் திட்ட இயக்குநர் திரு.கோவிந்தராவ், இ.ஆ.ப., மற்றும் மருத்துவக் கல்வி இயக்குநர் ஆகியோர் கள்ளக்குறிச்சிக்கு விரைந்துள்ளனர், என்றுள்ளார்.
-
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
பரந்தூர்-க்கு சொன்ன நோ.. சென்னை மக்களுக்கு அடுத்த அதிர்ச்சி! சீட்டுக்கட்டுப்போல் சரியும் மெகா திட்டங்கள்! -
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
அம்மாவை இழந்த அஜித்துக்கு மு.க. ஸ்டாலின் ஆறுதல்.. ஒரு வரியில் சொன்ன நெகிழ்ச்சி வார்த்தை.. குவியும் பாராட்டு -
தமிழகத்தில் பெட்ரோல் – டீசல் தட்டுப்பாடு.. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பங்குகள் மூடல்.. மக்கள் அவதி -
கள்ளச்சாராயம் குடித்து 18 பேர் பலி! பலருக்கு தீவிர சிகிச்சை! மகாராஷ்டிராவில் அதிர்ச்சி சம்பவம் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications