இப்படி ஒரு தீபாவளி போனஸை வாழ்நாளில் பார்க்க முடியாது.. இன்ப அதிர்ச்சி கொடுத்த நீலகிரி சிவக்குமார்
ஊட்டி: நீலகிரி மாவட்டத்தில் தனது டீ எஸ்டேட்டில் பணியாற்றும் 15 ஊழியர்களுக்கு தீபாவளி போனஸாக அவரவர் விரும்பும் வாகனங்களை வழங்கி இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார் எஸ்டேட் உரிமையாளர் சிவக்குமார். இந்த வீடியோ தான் சமூக வலைதளத்தில் இப்போது பேசுபொருளாக மாறி உள்ளது.
தீபாவளி பண்டிகை நெருங்கிவிட்டது. இன்னும் சில நாளில் தீபாவளி போனஸ் பல நிறுவனங்களில் போடப்போகிறார்கள். இதனால் தீபாவளி போனஸ் யார் யாருக்கு எவ்வளவு போடுவார்கள் என்ற ஏக்கமும் எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது.இன்னும் 10 நாளில் வரப்போகும் தீபாவளிக்கு பலர் போனஸில் தான் துணி வாங்க வேண்டும் என்று ஆசைப்படுவார்கள். சிலர் தீபாவளி போனஸை வைத்து வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவார்கள்.

இதனிடையே தீபாவளி போனஸ் என்பது ஐடி நிறுவனங்கள் உள்பட கார்ப்பரேட் நிறுவனங்களில் வேலை செய்பவர்களுக்கு பெரும்பாலும் கிடைப்பது இல்லை.. தொழில் நிறுவனங்கள், வர்த்தக நிறுவனங்கள் வேலை செய்வோருக்கு தான் வழங்கப்படுகிறது.

தீபாவளி போனஸ் என்பது சில நிறுவனங்களில் இரண்டு மாத சம்பளம் தருவார்கள், சில நிறுவனங்களில் ஒரு மாத சம்பளம் தருவார்கள், சில நிறுவனங்களில் கருணை தொகையாக சில ஆயிரங்கள் மட்டுமே கிடைக்கும்.. சில நிறுவனங்கள் தீபாவளி பரிசாக கார் கூட வழங்கி உள்ளார்கள். சில நிறுவனங்கள் நிறைய பரிசுகளை தருகின்றன. இந்நிலையில் தீபாவளி போனஸ் வாங்க போகிறவர்களும், தீபாவளி போனஸ் வாங்கியவர்களும், தீபாவளி போனஸை கண்ணிலேயே பார்க்காதவர்களும் நீலகிரியில் நடந்த சம்பவத்தை பாருங்கள்.

மலைகளின் அரசி என்று அழைக்கப்படும் நீலகிரி மாவட்டம் ஊட்டியில் டீ எஸ்டேட் வைத்திருப்பவர் சிவகுமார். இவர் மற்ற நிறுவனங்களை போல் இல்லாமல் வித்தியாசமான முறையில் தீபாவளி போனஸ் வழங்கி உள்ளார். தன்னிடம் பணியாற்றும் 15 தொழிலாளர்களுக்கு எந்த வாகனம் பிடிக்கும் என்று கேட்டு வைத்திருக்கிறார்.

அந்த வாகனத்தை இன்று தீபாவளி பரிசாக சர்ப்ரைஸ் கிப்ட்டாக வழங்கி உள்ளார். சிலர் புல்லட் வாகனத்தையும், சிலர் ஹீரோ, ஹோண்டா, பஜாஜ் என பிடித்த வாகனத்தை கேட்டிருந்த நிலையில், அவர்களை அழைத்து அதனை பரிசாக வழங்கினார். இந்த இன்ப அதிர்ச்சியால் நெகிழ்ந்து போன தொழிலாளர்கள் உரிமையாளர் சிவகுமாருக்கு நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்தனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications