இதுவல்லவோ மனிதநேயம்... மாணவி ஸ்வாதிக்கு உதவிய நல் உள்ளங்கள்!
கடந்த இரு தினங்களாக சமூக வலைத் தளங்களில் மிகவும் நெகிழ வைத்துக் கொண்டிருக்கும் சம்பவம் கிராமத்து மாணவி ஸ்வாதி கோவை வேளாண் பல்கலைக் கழகத்தில் இடம் பெற்ற நிகழ்வுதான்.
திருச்சி மாவட்டம், முசிறியைச் சேர்ந்த விவசாயி ராஜேந்திரனின் ஒரே மகள் ஸ்வாதி. ராஜேந்திரன் காலமாகிவிட்டார். கணவன் இல்லாத நிலையிலும் கஷ்டப்பட்டு மகளைப் படிக்க வைத்தார் தங்கப்பொண்ணு. ப்ளஸ்-டூவில் 1,076 மதிப்பெண்கள் எடுத்திருந்தார். காத்திருப்போர் பட்டியலில் இருந்தார். ஏற்கெனவே தேர்வான சில மாணவர்கள் வேறு படிப்புகளுக்குச் சென்றதால் ஸ்வாதிக்கு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தில் சேரும் வாய்ப்பு கிடைத்தது.

ஆகஸ்ட் 8-ம் தேதி காலை 8.30 மணிக்கு கோயம்புத்தூர் வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் உள்ள அண்ணா கலையரங்கில் நடக்கும் இறுதிகட்ட கலந்தாய்வில் கலந்துகொள்ள வருமாறு மின்னஞ்சல் (இமெயில்) அழைப்புக் கடிதம் ஒன்றை ஸ்வாதிக்கு அனுப்பியது வேளாண்மை பல்கலைக்கழகம். ஆங்கிலத்தில் வந்திருந்தது அந்தக் கடிதம்.
அண்ணா கலையரங்கம் என்று இடம் பெற்றிருந்த வாசகத்தை அண்ணா பல்கலைக்கழகம் என்று தவறாக புரிந்துகொண்ட மாணவி ஸ்வாதி, அம்மாவுடன் சென்னை, அண்ணா பல்கலைக்கழக வளாகத்துக்கு வந்தடைந்தார். ஆனால் அவர் செல்லவேண்டியது கோவை அண்ணா கலையரங்கிற்கு; சென்னை அண்ணா பல்கலைக்கழகத்திற்கு அல்ல என தெரியவந்தபோது அதிர்ச்சியடைந்து நடுத் தெருவில் நின்றனர் மாணவியும் அவர் அம்மாவும்.
நெடு நேரம் இவர்கள் இப்படி நிற்பதைக் கவனித்த, அந்தப் பகுதியில் நடைப் பயிற்சியிலிருந்த டெக் மஹிந்திரா நிறுவன உயர் அதிகாரி எம் சரவணன் என்பவர்தான் இவர்களை விசாரித்திருக்கிறார்.
உண்மை தெரிந்த அவர், உடனடியாக தன் நண்பர்கள் உதவியுடன் இந்தப் பெண்ணையும் அவர் அம்மாவையும் விமானம் மூலம் கோவைக்கு அனுப்பியுள்ளார்.
அதற்கு முன்பு வேளாண்மைப் பல்கலைக் கழகத்துக்கு விஷயத்தைச் சொல்லி, கலந்தாய்வு நேரத்தை 2 மணி நேரம் நீட்டிக்க வைத்திருக்கிறார். விமானத்தில் வரும் ஸ்வாதி மற்றும் அவர் அம்மாவை வேளாண்மைப் பல்கழகமே வாகனம் அனுப்பி விமான நிலையம் அமைந்துள்ள பீளமேட்டிலிருந்து அழைத்து வந்திருக்கிறது.

கலந்தாய்வில் ஸ்வாதிக்கு பிடெக் உணவு தொழில்நுட்பவியலில் இடம் கிடைத்திருக்கிறது.
எம் சரவணன் காலத்தால் செய்த அந்த பேருதவி, ஒரு பெண் மற்றும் அவர் குடும்ப எதிர்காலத்தையே காப்பாற்றியுள்ளது.
ஸ்வாதிக்கு உதவிய சரவணனுக்கும், அவரது நண்பர்களுக்கும் சமூக வலைத் தளங்கள், தொலைபேசிகள் மூலம் வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.
குறிப்பு: எம் சரவணன் சேலம் மாவட்டம் சங்ககிரிக்கு அருகில் உள்ள வைகுந்தம் கிராமத்தைச் சேர்ந்தவர. விவசாய குடும்பத்தில் பிறந்த, சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தில் படித்து இன்று டெக் மஹிந்திரா நிறுவனத்தில் உயர் பதவியில் உள்ளார். அண்ணா பல்கலைக் கழக வளாகத்தில் நடைப் பயிற்சி செய்பவர்களை இணைத்து ஒரு குழு வைத்திருக்கிறார். ஸ்வாதிக்கு உதவியதில் இந்தக் குழுவுக்கும் பங்குண்டு.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications