முக்கிய பிரமுகர்களின் ஏடாகூட வீடியோக்கள்... சசிகலா புஷ்பா தில்லாக மோதுவதின் பின்னணி..
சென்னை: தமிழகத்தில் ஆளும் கட்சிக்கு நெருக்கமான மிக முக்கிய பிரமுகர்களின் ஏடாகூட வீடியோக்கள் தம் வசம் இருப்பதால்தான் முதல்வர் ஜெயலலிதாவை எதிர்த்து சசிகலா புஷ்பா தில்லாக மல்லுக்கட்டுவதாக செய்திகள் வெளியாகி உள்ளன.
முதல்வர் ஜெயலலிதாவுக்கு சவால்விட்டு பேட்டி கொடுத்த அதிமுகவினர் அண்மைக்கால சரித்திரத்தில் யாரும் இல்லை.. ஆனால் அக்கட்சியில் இருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்ட ராஜ்யசபா எம்.பி சசிகலா புஷ்பாவோ, தமிழகத்தை தலைகீழாக புரட்டுவேன் என மிரட்டிக் கொண்டிருக்கிறார்.
ஒருபோதும் ராஜ்யசபா எம்.பி. பதவியை ராஜினாமா செய்ய முடியாது என்றும் சசிகலா தில்லாக கூறி வருகிறார். இப்படி சசிகலா புஷ்பா படுபோல்டாக ஜெ.வை எதிர்ப்பது பல காரணங்கள் கூறப்படுகிறது.

தொழிலதிபர்...
தென்மாவட்ட தொழிலதிபர் ஒருவரது பக்க பலம் சசிகலா புஷ்பாவுக்கு இருப்பதாக கூறப்படுகிறது. தற்போது சசிகலா புஷ்பாவையும் தென்மாவட்ட புள்ளியையும் வேட்டையாடும் நடவடிக்கைகள் தொடங்கிவிட்டதாக கூறப்படுகிறது.

அந்தரங்க வீடியோக்கள்...
அதே நேரத்தில் ஆளும் அதிகார வர்க்கத்துக்கு மிக நெருக்கமான பிரமுகர்கள் சிலரைப் பற்றிய அந்தரங்க வீடியோக்கள் சசிகலா புஷ்பாவிடம் சிக்கியிருக்கிறதாம்.. சசிகலா புஷ்பாவுடன் நட்பாக இருந்த காலத்தில் அந்த பிரமுகர்களின் பலவீனங்கள் பின்னாளில் உதவும் என்பதால் எடுத்து வைக்கப்பட்ட ஏடாகூட வீடியோக்களாம் அது.

தலைகீழாகிடுமாம்...
அந்த அஸ்திரத்தை 'ரிலீஸ்' செய்தால் அவ்ளோதான்... தமிழக அரசியலே தலைகீழாக போய்விடுமாம்... இப்படித்தான் தமக்கு நெருக்கமான பத்திரிகையாளர்களிடம் சொல்லி வருகிறாராம் சசிகலா புஷ்பா. இது உண்மைதானா? என மேலிடமும் விசாரித்துக் கொண்டிருக்கிறதாம்..

நிபந்தனைகள்...
இந்த விசாரணையில் சில வீடியோக்கள் இருப்பது உண்மை என்பதற்கான சமிக்ஞைகளும் சசிகலா புஷ்பா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாம்... ஆகையால் சமாதானமாக போய்விடலாம்... வம்பு வழக்கு எதுக்கு என நிபந்தனை விதித்துக் கொண்டிருக்கிறதாம் சசிகலா தரப்பு.

ஆடுபுலி ஆட்டம்
இதற்கு பதிலடியாக கார்டன் தரப்பும் எம்பி பதவியை ராஜினாமா செய்துவிட்டால் இந்த பஞ்சாயத்தே இல்லையே என சொல்லி வருகிறதாம்... சீக்கிரமாக இந்த ஆடு புலி ஆட்டத்துக்கு முடிவு வந்துவிடும் என்றே கூறப்படுகிறது.
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications