For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

"பிடிஆர்".. நிபுணர் குழுவில் ரகுராம் ராஜன்.. உள்ளே கொண்டு வந்தது யார்? பின்னணியில் என்ன நடந்தது?

Google Oneindia Tamil News

சென்னை: தமிழ்நாடு அரசுக்கு பொருளாதார ஆலோசனை வழங்கும் நிபுணர் குழுவில் ரகுராம் ராஜன் கொண்டு வரப்பட்டது, இதற்கான உறுப்பினர்கள் தேர்வு எப்படி நடந்தது என்பது குறித்த விவரங்கள் வெளியாகி உள்ளது.

Recommended Video

    முதல்வருக்காக உருவாக்கப்படும் நிபுணர் குழு | Economic Advisory Council | Oneindia Tamil

    தமிழ்நாடு அரசுக்கும், முதல்வர் ஸ்டாலினுக்கும் பொருளாதார ஆலோசனைகளை வழங்க வல்லுநர் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது. முன்னாள் ஆர்பிஐ இயக்குனர் ரகுராம் ராஜன் தலைமையில் மாபெரும் ஆலோசனை நிபுணர் குழு அமைக்கப்படுகிறது.

    அமெரிக்காவின் நோபல் பரிசு பெற்ற எஸ்தர் டாப்லோ என்ற பொருளாதார நிபுணரும், ஒன்றிய அரசின் முன்னாள் தலைமை பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன், பொருளாதார நிபுணர் ஜீன் டிரேசல், ஒன்றிய அரசின் முன்னாள் நிதித்துறை செயலாளர் டாக்டர் எஸ் நாராயண் ஆகியோர் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது.

    என்ன குழு

    என்ன குழு

    இந்த குழுவிற்காக சர்வதேச அளவில் தேடி தேடி நிபுணர்களை தேர்வு செய்துள்ளனர். பொருளாதார பிரிவில் வெவ்வேறு நாடுகளில் சிறந்து விளங்கும் வல்லுநர்களை தேடிப்பிடித்து குழு அமைத்து உள்ளனர். பல்வேறு கட்ட ஆலோசனைகள், பல்வேறு காண்டக்ட்டுகளை பயன்படுத்தி இவர்கள் எல்லோரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்த நிபுணர் குழுவை தேர்வு செய்வதில் முதல்வர் ஸ்டாலினின் நேரடி பங்கு இருந்துள்ளது.

    நேரடி பங்கு

    நேரடி பங்கு

    முதல்வர் ஸ்டாலின் தனது டீம் மூலம் நேரடியாக இப்படி உறுப்பினர்களை தேர்வு செய்ய உத்தரவிட்டுள்ளார். கட்சியில் இருக்கும் முக்கிய நிர்வாகிகள், வல்லுனர்களிடம் பேசி, இந்த குழுவிற்கான உறுப்பினர்களை தேர்வு செய்ய சொல்லி இருக்கிறார். அதில் முதல் நபர்தான் எஸ்தர் டஃப்லோ. உலகம் முழுக்க வறுமையை ஒழிப்பதற்காக இவரின் அப்துல் லதீப் ஜமீல் ப்ராவர்டி ஆக்சன் லேப் என்ற சர்வதேச ஆராய்ச்சி குழு இயங்கி வருகிற

    சுவாரசியம்

    சுவாரசியம்

    இந்த குழு நடத்திய ஆராய்ச்சி காரணமாகவே எஸ்தர் டஃப்லோவிற்கு நோபல் பரிசும் கூட 2019ல் பொருளாதார பிரிவில் வழங்கப்பட்டது. இந்த குழுவிற்குள் எப்படி வந்தார் என்பது உறுதியாக தெரியவில்லை என்றாலும், அப்துல் லதீப் ஜமீல் ப்ராவர்டி ஆக்சன் லேப் குழுவை உருவாக்கியவர்களில் ஒருவரான தமிழர் செந்தில் முல்லைநாதன் மூலமாக எஸ்தர் டஃப்லோவை உள்ளே கொண்டு வந்ததாக கூறப்படுகிறது.

    எஸ்தர் டஃப்லோ

    எஸ்தர் டஃப்லோ

    அதோடு எஸ்தர் டஃப்லோ சில தமிழ்நாடு அரசியல் தலைவர்களுக்கு நெருக்கம், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கும் பிடித்தமானவர். இப்படி தமிழ்நாட்டோடு பல காண்டாக்ட் இருந்த நிலையில் எளிதாக எஸ்தர் டஃப்லோவிடம் பேசி அவர் உள்ளே கொண்டு வரப்பட்டுள்ளார். இந்த குழுவில் இருக்கும் உறுப்பினர்களை தேர்வு செய்வதில் தமிழ்நாடு நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் முக்கிய பங்கு வகித்துள்ளார் என்றும் கூறுகிறார்கள் .

    பங்கு

    பங்கு

    ரகுராம் ராஜன் உட்பட டீமில் யார் எல்லாம் இருந்தால் நன்றாக இருக்கும், யாரெல்லாம் தமிழ்நாட்டிற்கு இப்போது தேவை என்று பிடிஆரும் பரிந்துரை செய்துள்ளார். இப்படித்தான் ரகுராம் ராஜன் உள்ளிட்ட முக்கிய வல்லுநர்கள் உள்ளே வந்ததாக கூறப்படுகிறது. இதெல்லாம் போக சில காங்கிரஸ் தலைவர்களும் ரகுராம் ராஜனுக்கு மிக நெருக்கம். இந்த காண்டாக்ட்களை பயன்படுத்தி பிஸியாக இருந்த ராஜனை தமிழ்நாட்டிற்கு ஆலோசனை வழங்க சம்மதிக்க வைத்துள்ளனர்.

    சுவாரசியம்

    சுவாரசியம்

    இது போக அரவிந்த் சுப்ரமணியன் அசோக பல்கலையில் இருந்து வெளியேறிய பின் பிரவுன் பல்கலையில் இணைய காத்திருந்தார். ஒன்றிய அரசின் முன்னாள் பொருளாதார ஆலோசகர். தமிழ்நாடு அரசியல் தலைவர்கள் பலருடன் இவர் நட்பு பாராட்டும் நிலையில், எளிதாக தமிழ்நாட்டிற்கு ஆலோசனை வழங்க இவர் ஒப்புக்கொண்டு இருக்கிறார். இதுபோக ஜான் த்ரே போன்றவர்களும் கூட திமுகவிற்கு நெருக்கமான சில வெளிநாட்டு காண்டாக்ட் மூலமே களமிறக்கப்பட்டதாக தெரிகிறது.

    வெளிநாடு

    வெளிநாடு

    அவ்வளவு எளிதாக இவர்களை பேசி சம்மதிக்க வைத்துவிடவில்லை. கொரோனா தொடங்கி பொருளாதார மந்தநிலை வரை பல விஷயங்களை குறிப்பிட்டே இவர்களை சம்மதிக்க வைத்துள்ளனர். நிறைய வல்லுநர்கள் அடங்கிய குழு முதலில் தேர்வு செய்யப்பட்டு உள்ளது. அதன்பின் அந்த குழுவில் முதல்வர் ஸ்டாலின் குறிப்பிட்ட சிலரை டிக் அடித்து இறுதி செய்துள்ளார் என்கிறார்கள்.

    English summary
    How Tamilnadu government brings Raghuram Rajan and other experts inside the Expert Financial Committee.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X