For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

விசில் அடிக்க தொடங்கிய குக்கர்... 10 நாளில் தனது சின்னத்தை வைரலாக்கிய தினகரன்!

தனக்கு குக்கர் சின்னம் அளிக்கப்பட்ட இரண்டே வாரத்தில் அதை மக்கள் மத்தியில் பெரிய அளவில் வைரலாக்கி இருக்கிறார் டிடிவி தினகரன்.

By Shyamsundar
Google Oneindia Tamil News

Recommended Video

    முதல் சுற்றிலேயே தினகரன் முன்னிலை... உற்சாகத்தில் ஆதரவாளர்கள்- வீடியோ

    சென்னை: தனக்கு குக்கர் சின்னம் அளிக்கப்பட்ட இரண்டே வாரத்தில் அதை மக்கள் மத்தியில் பெரிய அளவில் வைரலாக்கி இருக்கிறார் டிடிவி தினகரன். முதல் மூன்று நாட்கள் சரியாக பிரச்சாரம் செய்ய முடியாமல் போனாலும் கூட அவர் குக்கர் சின்னத்தை மக்கள் மத்தியில் பெரிய அளவில் கொண்டு சேர்த்து இருக்கிறார்.

    தேர்தல் ஆணையத்திடம் கஷ்டப்பட்டு புகார் அளித்த பின்பே அவருக்கு பிரச்சாரம் செய்ய தமிழக போலீஸ் அனுமதி அளித்தது. தனக்கு சின்னம் கிடைத்தவுடன் அதை வைரலாக மாற்ற பல முக்கிய செயல்களை செய்ய தொடங்கினார்.

    கூகுள், ஏர்டெல் போன்ற நிறுவனங்கள் தங்கள் லோகோவை மாற்றிவிட்டு எப்படியெல்லாம் கஷ்டப்பட்டதோ அதுபோல் தினகரன் கஷ்டப்படாமல் திறமையாக சமாளித்து இருக்கிறார்.

    தொப்பி இல்லை

    தொப்பி இல்லை

    பல கார்ப்பரேட் கம்பெனிகள் தங்களது லோகோவை மாற்றிவிட்டு அதை எப்படி மக்கள் மத்தியில் கொண்டு சேர்ப்பது என்று தெரியாமல் திணறிக் கொண்டு இருக்கின்றனர். ஏன் கூகுள் கூட தனது லோகோவை மாற்றிய போது இதுகுறித்து பெரிய விவாதங்கள் எழுந்தது. தினகரன் என்றால் தொப்பி, தொப்பி என்றால் தினகரன் என்று மக்கள் மத்தியில் ஆழமாக எண்ணம் இருந்தது. ஆனால் அதற்கு தேர்தல் ஆணையம் பெரிய முற்றுப்புள்ளி வைத்து அவருக்கு குக்கர் சின்னம் கொடுத்தது.

    தீயாக வேலை செய்தார்

    தீயாக வேலை செய்தார்

    தினகரன் கேட்டதோ தொப்பி, விசில் இல்லையென்றால் கிரிக்கெட் பேட். ஆனால் அவர் கொஞ்சம் கூட நினைக்காத குக்கர் சின்னம்தான் அவருக்கு கிடைத்தது. ஆனாலும் கிடைத்த குக்கரை வைத்து அவர் 'பிரியாணியே' சமைத்து இருக்கிறார். தன்னுடைய சின்னத்தை வைரலாக்க பல வேலைகள் செய்தார்.

    குக்கர் கொண்டுவரப்பட்டது

    குக்கர் கொண்டுவரப்பட்டது

    ஆர்.கே நகர் வாக்கு எண்ணிக்கையில் தற்போதுவரை டிடிவிதான் முன்னிலை வகிக்கிறார். தனக்கு சின்னம் கிடைத்தவுடன் அதை ஆர்.கே நகர் முழுக்க அதை கொண்டு போவதற்காக பல லட்சங்களில் செலவு செய்து இருக்கிறார். ஏரியா முழுக்க குக்கர் இறக்கினார். இரட்டை இலை என்ற பிரமாண்ட சின்னத்தை குக்கர் கொஞ்சம் கொஞ்சமாக இப்படித்தான் மறைக்க தொடங்கியது. ஆர்.கே நகரில் எந்த பக்கம் திரும்பினாலும் குக்கர் மட்டுமே கண்ணில்படும்படி பார்த்துக் கொண்டார்.

    பிரபலம் ஆனது

    பிரபலம் ஆனது

    சென்னை மக்கள் மட்டும் இல்லாமல் அகில இந்திய மீடியாவும் குக்கர் சின்னம் பற்றி பேசும்படி பார்த்துக் கொண்டார். டிடிவி ஆட்கள் ஒவ்வொரு நபரிடமும் சென்று வாக்கு அளிக்கும் எந்திரத்தில் 33வது இடத்தில் தான் குக்கர் சின்னம் இருக்கிறது என்ற மக்கள் மத்தியில் பதிய வைத்தார்கள்.

    இரட்டை இலையை விட அதிகம்

    இரட்டை இலையை விட அதிகம்

    சினிமாவில் ''இதுக்கா இவ்வளவு அக்கப்போர்'' என்று சொல்வது போல பல நாட்களாக இரட்டை இலை சின்னத்திற்கு போராடிய தினகரன் எந்த போராட்டமும் இல்லாமல் குக்கர் சின்னத்தை வைத்து இரட்டை இலையை முந்தி இருக்கிறார். இந்த தேர்தல் முடிவு எப்படி வந்தாலும் ஆர்.கே நகர் மக்கள் குக்கர் சின்னத்தை மறக்க மாட்டார்கள்.

    English summary
    TTV made his Cooker symbol famous just in 10 days.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X